வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

டாப் சீரியலை விரட்டியடித்த சென்டிமெண்ட் சீரியல்.. டிஆர்பி-யில் மல்லுக்கட்டும் சன், விஜய் டிவி

டிஆர்பி-யில் எப்பொழுதுமே மல்லுக்கட்டு கொண்டிருக்கும் சன் மற்றும் விஜய் டிவி சீரியல்களில் கடந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட் இணையத்தில் வெளியாகி கலக்கிக் கொண்டிருக்கிறது. இதில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து முதலிடத்தில் இருந்த சன் டிவியின் கயல் சீரியல், தற்போது பின்னுக்குத் தள்ளப்பட்டு அதே சேனலில் வானத்தைப்போல சீரியல் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.

இந்த சென்டிமெண்ட் சீரியலில் அண்ணன்-தங்கை பாசப் போராட்டத்தை அழகாக காண்பித்து ரசிகர்களை ஈர்த்துள்ளனர். முதலிடத்தை தவறவிட்ட கயல் சீரியலுக்கு 2-ம் இடம் கிடைத்திருக்கிறது. இதைத்தொடர்ந்து 3-வது இடம் இரண்டு மனைவிகளை ஒரே டிராக்கில் ஓடிக் கொண்டிருக்கும் சுந்தரி சீரியல் பெற்றிருக்கிறது.

Also Read: டிஆர்பி-யில் அசுர பலத்தை காட்ட போட்டிபோடும் 5 சீரியல்கள்!

4-வது இடம் மீண்டும் சன் டிவியின் கண்ணான கண்ணே சீரியலுக்கு கிடைத்திருக்கிறது. இப்படி தொடர்ந்து 4 இடங்களைப் பெற்றிருக்கும் சன் டிவியுடன் கடும் போட்டி போட்டு, விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் 5-வது இடத்தை அடித்துப்பிடித்துள்ளது.

இந்த சீரியலில் பாக்யா விவாகரத்துக்குப் பிறகு வீட்டை விட்டு வெளியே போகப் போகிறார் என ரசிகர்கள் நினைத்த போது, யாரும் எதிர்பாராத அதிரடி திருப்பமாக கோபி வீட்டை விட்டு வெளியே போனது சீரியல் ரசிகர்களை குதூகலப்படுத்தியிருக்கிறது.

Also Read: டாப் 10 சீரியல் நடிகைகளின் மொத்த லிஸ்ட்!

6-வது இடம் சன் டிவியின் விறுவிறுப்பான சீரியலான ரோஜா சீரியலுக்கும், 7-வது இடம் விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலுக்கும் கிடைத்திருக்கிறது. 8-வது இடம் துணிச்சலான பெண்ணின் கதையான சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியல் பெற்றிருக்கிறது.

9-வது இடத்தை விஜய் டிவியின் நான்கு அண்ணன் தம்பிகளின் பாசத்தை அழகாக காண்பித்துக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிடித்திருக்கிறது. 10-வது இடம் இரண்டு குழந்தைகளின் சுட்டி சுட்டி தனத்தைப் சீரியலில் காண்பித்து சின்னத்திரை ரசிகர்களை குழந்தை பருவத்திற்கு அழைத்துச்செல்லும் அபியும் நானும் சீரியல் பெற்றிருக்கிறது.

இவ்வாறு கடந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் ஏற்பட்டிருக்கும் அதிரடி மாற்றங்கள் சிலர் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், சுவாரசியமான சீரியல்களை மட்டுமே அவர்கள் விரும்புகின்றனர் என்பதை டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட் காண்பிக்கிறது.

Also Read: பிட்டு படத்தை மிஞ்சிய சன் டிவி சீரியல்!

Trending News