
This Week OTT Theater Release: கடந்த வாரம் ஓடிடி தளத்தில் டிராகன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், ஆபிஸர்ஸ் ஆன் டியூட்டி ஆகிய படங்கள் வெளியானது. அதை அடுத்து இந்த வாரம் என்னென்ன ரிலீஸ் என்பதை பார்ப்போம்.
தியேட்டரை பொறுத்தவரையில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த வீர தீர சூரன் வரும் 27 ஆம் தேதி வெளியாகிறது. அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், எஸ் ஜே சூர்யா, துஷாரா என முக்கிய பிரபலங்கள் இதில் நடித்துள்ளனர்.
இதன் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி விக்ரம் ரசிகர்களை குஷிப்படுத்தியது. அதைத் தொடர்ந்து தற்போது பட குழு தீவிர ப்ரோமோஷனில் இறங்கியுள்ளனர். நிச்சயம் படம் மெகா ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பவம் செய்யப் போகும் சீயானின் வீர தீர சூரன்
அதை அடுத்து பிரித்விராஜ், மோகன்லால் கூட்டணியின் எம்புரான் மலையாளம் உட்பட அனைத்து மொழிகளிலும் மார்ச் 27 வெளியாகிறது. இப்படத்திற்கும் பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது.
அடுத்ததாக டிஜிட்டலை பொறுத்தவரையில் இந்த வாரம் 7 முக்கிய படங்கள் வெளியாகிறது. அதன்படி லாஸ்லியா நடிப்பில் வெளியான மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் மார்ச் 25ஆம் தேதி டென்ட் கொட்டா, ஆகா தமிழ், சிம்பிளி சவுத் ஆகிய தளங்களில் வெளியாகிறது.
அடுத்து ஆதி, லக்ஷ்மி மேனன் நடிப்பில் வெளிவந்த சப்தம் 28ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகிறது. ஈரம் கூட்டணியின் அடுத்த படைப்பான படம் தியேட்டரில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
இதை அடுத்து மூன்று வாரமாக வரும் ஆனா வராது என்ற மோடில் இருந்த ஃபயர் இந்த வாரம் வெள்ளிக்கிழமை டென்ட் கொட்டா தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஹாலிவுட் படமான முஃபாசா தி லைன் கிங் தமிழ் உட்பட பிற மொழிகளில் 26 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக இருக்கிறது.
அடுத்ததாக விமல் நடிப்பில் உருவாகி இருக்கும் ஓம் காளி ஜெய் காளி வெப்தொடர் வரும் 28ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.
அதைத்தொடர்ந்து சிங்கம்புலி நடிப்பில் காமெடி படமாக வெளிவந்த செருப்புகள் ஜாக்கிரதை ஜீ5 தளத்தில் மார்ச் 28 வெளியாகிறது.
இப்படியாக இந்த வாரம் பல படங்கள் வெளியாகிறது. அதில் இளைஞர் பட்டாளம் ஃபயர் படத்தை தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.