This Week Theater OTT Release: கடந்த வாரம் தனுஷின் ராயன் வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. படம் வெளியான நான்கு நாட்களிலேயே 75 கோடியை நெருங்கி விட்டது. விரைவில் இது 100 கோடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒரு புறம் இருக்க இந்த வாரம் ஆகஸ்ட் இரண்டாம் தேதி தமிழை பொறுத்தவரையில் ஆறு படங்கள் வெளியாகிறது. அதன் ட்ரெய்லர்கள் அனைத்தும் வரவேற்பு பெற்ற நிலையில் எந்த படம் இந்த ரேஸில் ஜெயிக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஒரு பக்கம் இருக்கிறது.
அதன்படி யோகி பாபு நடிப்பில் சிம்பு தேவன் இயக்கியிருக்கும் போட் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகிறது. அடுத்ததாக விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ் நடிப்பில் மழை பிடிக்காத மனிதன் 2ம் தேதி வெளியாகிறது.
அதே நாளில் அம்மு அபிராமி நடிப்பில் பாரி இளவழகன் இயக்கி இருக்கும் ஜமா வெளியாகிறது. மேலும் நகுல் நடிப்பில் உருவாகி இருக்கும் வாஸ்கோடகாமா, பால சரவணன் மற்றும் பலர் நடித்துள்ள திகில் படமான பேச்சி, நண்பன் ஒருவன் வந்த பிறகு ஆகிய படங்கள் ஆகஸ்ட் 2ம் தேதி வெளியாகிறது.
இந்த வாரம் வெளியாகும் படங்கள்
இந்த ஆறு படங்களில் யோகி பாபுவின் போட் திரையுலகினர் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது. இதற்கு அடுத்தபடியாக ஓடிடியை பொருத்தவரையில் ஆறு படங்கள் வெளியாகிறது.
அதில் ராஜமவுலியின் டாக்குமென்ட்ரி படமான மாடர்ன் மாஸ்டர்ஸ் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வரும் வெள்ளி வெளியாகிறது. டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் கிங்டம் ஆஃப் த பிளானட் ஆஃப் தி ஏப், பிருந்தா சோனி லைவ் தளத்திலும், ரெபெல் மூன் டைரக்டர்ஸ் கட் நெட்ப்ளிக்ஸ் தளத்திலும் ஆகஸ்ட் 2 வெளியாகிறது.
மேலும் அறிவியல் சார்ந்த படமான டூன் 2 ஜீ சினிமாவில் ஆகஸ்ட் 1 வெளியாகிறது அதேபோல் நகைச்சுவை திகில் படமான முஞ்யா டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஆகஸ்ட் 1 வெளியாகிறது.
இப்படியாக இந்த வாரம் தியேட்டர் மற்றும் டிஜிட்டல் தளத்தில் 12 படங்கள் வெளியாகிறது. அதில் விஜய் ஆண்டனி யோகி பாபு இருவரும் மோதும் நிலையில் யார் ஜெயிப்பார்கள் என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும்.
ஆகஸ்ட் 2ம் தேதியை குறிவைத்து இறங்கும் 12 படங்கள்
- இந்த 6 மாசத்தில் ஓடிடியில் கெத்து காட்டிய 5 மலையாள படங்கள்
- இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்
- இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 7 படங்கள்