This Week Release Movies: அடுத்த வாரம் தங்கலான் உட்பட ஏகப்பட்ட படங்கள் திரைக்கு வர இருக்கிறது. அதனாலேயே பிரசாந்த் அந்தகன் படத்தை ஒரு வாரம் முன்னதாகவே வெளியிட பிளான் செய்துவிட்டார். அதன்படி நாளை இப்படம் திரைக்கு வருகிறது.
இதன் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கும் இவருக்கு தற்போது அடுத்தடுத்த வாய்ப்புகள் தேடி வருகிறதாம். அதனால் டாப் ஸ்டார் அடுத்த சில வருடங்களுக்கு பிஸியாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
இப்படத்தை தொடர்ந்து நாளை அனில் எஸ்தர நடித்துள்ள மின்மினி படமும் வெளியாகிறது. இதை அடுத்து ஓடிடி பொறுத்தவரையில் எட்டு படங்கள் வெளியாகிறது. அதில் சங்கர், கமல் கூட்டணியின் இந்தியன் 2 நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.
டிஜிட்டலுக்கு வரும் இந்தியன் 2
இதே தளத்தில் தற்போது தி ப்ளைன்ட், தி அம்பர்லா அகாடமி வெப் சீரிஸும் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டுள்ளது. அடுத்து மம்முட்டி நடிப்பில் வெளியான மலையாள படமான டர்போ சோனி லைவ் தளத்தில் வெளியாகிறது.
மேலும் சோனியா அகர்வால் நடித்துள்ள 7g ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது. அதைத்தொடர்ந்து மலையாள படமான நடன்ன சம்பவம் சிம்ப்ளி சவுத் தளத்தில் நாளை வெளியாகிறது.
அதேபோல் அமேசான் ப்ரைம் தளத்தில் தற்போது ஒன் ஃபாஸ்ட் மூவ், தி ஹங்கர் கேம்ஸ் ஆகிய படங்கள் வெளியாகி இருக்கிறது. இதே தளத்தில் நாளை லிட்டில் மிஸ் ராவுத்தர் படமும் வெளியாகிறது. இப்படியாக இந்த வார இறுதியை 10 படங்களோடு கொண்டாடி மகிழலாம்.
வார இறுதியில் கலகலப்பாக்க வரும் படங்கள்
- இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 8 படங்கள்
- 23 ஆப்ரேஷனைத் தாண்டி சாதித்த ரியல் தங்கலான்
- பா ரஞ்சித்தின் அடுத்த ஹீரோ, வில்லன் இவங்க தான்