This Week Theater OTT Release Movies: கடந்த வாரம் டாப் ஸ்டார் பிரசாந்தின் அந்தகன் வெளியானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவருடைய படம் ரிலீஸ் ஆகிறது என்பதால் ரசிகர்கள் தங்களுடைய வரவேற்பை தாராளமாகவே கொடுத்து வருகின்றனர்.
அதை அடுத்து இந்த வாரம் தியேட்டரை பொறுத்தவரையில் ஆகஸ்ட் 15 தமிழில் மூன்று படங்கள் வெளியாகிறது. அதில் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் உயிரை பணயம் வைத்து நடித்திருக்கும் தங்கலான் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இதை அடுத்து திரில்லர் நாயகனான அருள் நிதியின் டிமான்ட்டி காலனி 2 வெளியாகிறது. ஏற்கனவே இதன் ட்ரெய்லர் வரவேற்பை பெற்ற நிலையில் முதல் பாகத்தைப் போல இப்படமும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை அடுத்து கதையின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் கலக்கி இருக்கும் ரகுதாத்தா ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகிறது. இதில் ஹிந்தி தெரியாமல் அவர் படும் கஷ்டங்களும் அதற்காக அவர் செய்யும் வேலைகளும் தான் படத்தின் மையக்கரு.
வசூல் வேட்டை நடத்த வரும் தங்கலான்
இதற்கு அடுத்தபடியாக ஓடிடியில் இந்த வாரம் ஏகப்பட்ட வெப் தொடர்கள் வெளியாகிறது. மனோரதங்கள் சீரிஸ் ஜீ5 தளத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகிறது. அதே நாளில் வேற மாதிரி ஆபீஸ் சீசன் 2 ஆகா தமிழ் தளத்தில் வெளியாகிறது.
மேலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு நெட்ஃப்லிக்ஸ் தளத்தில் எமிலி இன் பாரிஸ் வெளியாகிறது. இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 16ஆம் தேதி சத்யராஜ், சீதா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் மை பெர்பெக்ட் ஹஸ்பண்ட் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.
அடுத்ததாக இதே தளத்தில் ஆகஸ்ட் 13ஆம் தேதி தெலுங்கு படமான டார்லிங் வெளியாகிறது. இதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 16ஆம் தேதி நகுல் நடிப்பில் வெளியான வாஸ்கோடகாமா அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகிறது.
மேலும் ஆகஸ்ட் 16 அன்று நெட்ஃப்லிக்ஸ் தளத்தில் தி யூனியன் மற்றும் ஆகா தமிழ் தளத்தில் கொஞ்சம் ஆகிய படங்களும் வெளியாகின்றது. இப்படியாக இந்த வாரம் 15 மற்றும் 16 தேதிகளில் 11 படங்கள் வெளியாக இருக்கிறது. இதில் தங்கலான் தான் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பையும் குத்தகைக்கு எடுத்துள்ளது.
தியேட்டர் ஓடிடியை கலக்க வரும் படங்கள்
- Thriller Movies: திருப்பங்கள் நிறைந்த 5 மலையாள க்ரைம் திரில்லர் படங்கள்
- நடுநடுங்க வைத்த திரில்லரான டாப் 5 படங்கள்
- வார இறுதியை இந்த 10 படங்களோடு கொண்டாடுங்க