சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 7 படங்கள்.. அடங்காத அசுரனாக மிரட்ட வரும் ராயன்

This Week Theater OTT Release: கடந்த வாரம் தியேட்டரில் பெரிய பட்ஜெட் படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் இந்த வாரம் வெள்ளிக்கிழமை பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ராயன் வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இப்படம் தனுஷின் ஐம்பதாவது படம் ஆகும்.

மேலும் இப்படத்தை அவரே இயக்கி நடித்திருப்பதும் கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கேற்றார் போல் ஏ ஆர் ரகுமானின் இசையில் அனைத்து பாடல்களும் பட்டையை கிளப்பியுள்ளது. இப்படி அடங்காத அசுரனாக வரும் தனுஷ் நிச்சயம் வசூல் வேட்டை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு அடுத்ததாக தெலுங்கில் ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகியுள்ள ஆப்ரேஷன் ராவன் வரும் 26 ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆகிறது. இது தவிர ஓடிடியில் தற்போதைய நிலவரப்படி ஐந்து படங்கள் வெளிவர இருக்கிறது.

ரிலீசுக்கு தயாரான யோகி பாபுவின் சட்னி சாம்பார்

அதில் யோகி பாபு, கயல் சந்திரன், வாணி போஜன் நடிப்பில் உருவாகி இருக்கும் சட்னி சாம்பார், டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் வரும் 26 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. ஐசரி கணேஷ் இதை தயாரித்துள்ளார்.

இதை அடுத்து சோனியா அகர்வால் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான கிரான்மா வரும் 23ஆம் தேதி ஆகா தமிழ் தளத்தில் வெளியாகிறது. அதேபோல் பையா ஜி என்ற ஹிந்தி படம் ஜி5 தளத்தில் ஜூலை 26 வெளியாகிறது.

மேலும் யுகேந்திரன் நடிப்பில் வெளியான காழ் ஆகா தமிழ் தளத்தில் 23ஆம் தேதி வெளியாகிறது. இதை அடுத்து திகில் கலந்த ஹிந்தி படமான பிளடி இஷ்க் வரும் 26 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.

இப்படியாக மேற்கண்ட படங்கள் இந்த வாரம் வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்க இருக்கிறது. அதில் ராயன் படத்தில் தனுஷின் கதாபாத்திரம் ராவணனை பிரதிபலிப்பது போல் இருக்கும் என்ற தகவலும் கசிந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டி இருக்கிறது.

இந்த வாரம் வசூல் வேட்டைக்கு தயாராகும் ராயன்

Trending News