சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

இந்த வாரம் தியேட்டரில் வெளியாக உள்ள 6 படங்கள்.. உயிரை உருவ காத்திருக்கும் ஷைத்தான்

This Week Theatre Release Movies: வாரா வாரம் தியேட்டர்களில் புதுப்புது படங்கள் ரிலீஸ் ஆகி கொண்டு தான் இருக்கிறது. ஆனால் ஆடியன்ஸை கவர்ந்து வசூல் வேட்டையாடும் படங்களின் எண்ணிக்கை என்று பார்த்தால் அது கொஞ்சம் குறைவு தான். அந்த வகையில் இந்த வாரம் தியேட்டரில் வெளியாக இருக்கும் 6 படங்கள் பற்றி காண்போம்.

இதில் மாதவன், ஜோதிகா, அஜய் தேவ்கன் நடிப்பில் ஹிந்தியில் உருவாகி இருக்கும் ஷைத்தான் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படத்தின் டிரைலரே படு மிரட்டலாக இருந்தது. இதை தியேட்டரில் பார்க்கும்போது நிச்சயம் ஈரக் கொலை நடுங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இதற்கு அடுத்ததாக ஹன்சிகா நடித்துள்ள கார்டியன் என்ற திகில் படமும் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகிறது. இப்படத்தை தான் அவர் மிகவும் நம்பி இருக்கிறார். அடுத்ததாக ஊர்வசி, அட்டகத்தி தினேஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் J. பேபி என்ற படமும் 8ம் தேதி வெளிவர உள்ளது.

Also read: OTT ஹீரோக்கள் என முத்திரை குத்தப்பட்ட 6 நடிகர்கள்.. ஒரு வழியா தளபதி 68ல் இணைந்த அஜ்மல்

சுரேஷ் மாரி இயக்கி இருக்கும் இப்படம் எதார்த்தமான கதையாக அமைந்துள்ளது. அடுத்ததாக கடந்த மாதம் மலையாளத்தில் வெளிவந்து சக்கை போடு போட்ட பிரேமலு வரும் 8ம் தேதி தெலுங்கில் டப் செய்யப்பட்ட வெளியாகிறது. இதற்கும் கூடுதல் எதிர்பார்ப்பு இருக்கிறது.

மேலும் பிரசாத் ராமர் இயக்கத்தில் புது முகங்கள் நடித்திருக்கும் நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே என்ற படமும் மார்ச் 8 அன்று வெளியாகிறது. அடுத்ததாக புதுமுக இயக்குனர் பாலு ஷர்மா இயக்கியுள்ள உணர்வுகள் தொடர்கதை என்ற ரொமான்டிக் படமும் இந்த வாரம் தியேட்டரில் வெளியாகிறது.

இந்த படங்களில் எது பாக்ஸ் ஆபிஸை கலக்கும், எந்த படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைக்கும் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். சில வாரங்களுக்கு முன்பு வெளியான மஞ்சுமல் பாய்ஸ் தற்போது வரை தியேட்டர்களை ஆக்கிரமித்துள்ள நிலையில் புது படங்களும் போட்டிக்கு வந்துள்ளது.

Also read: OTT-யால் வந்த சாபக்கேடு.. மக்களால் பாராட்டப்படாத விட்னஸ் ஒரு தரமான விமர்சனம்

Trending News