ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

இந்த வார டிஆர்பி-யில் டாப் 6 இடத்தில் ரணகளம் செய்த ஒரே சேனல்.. அதிரடியாக போட்டி போடும் சன், விஜய், ஜீ தமிழ்

TRP Ratings Of  Tamil Serials: சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் எந்த சீரியல் ரசிகர்களை வசப்படுத்தி இருக்கிறது என்பதை அந்த வார டிஆர்பி ரேட்டிங்கை பார்த்து தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் ஜீ தமிழில் கார்த்திகை தீபம் சீரியல் 10-வது இடத்தை பிடித்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக பல நாட்களாக நான்கு அண்ணன் தம்பிகள் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்வதற்காக புது வீடு கட்டி புதுமனை புதுவிழா கொண்டாடி ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்திய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு 9-வது இடம் கிடைத்துள்ளது. 8-வது இடம் புத்தம் புது சீரியலானாலும் ரசிகர்களின் மனதைக் கொள்ளை அடித்த ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் பிடித்துள்ளது.

Also Read: பொண்டாட்டியை அனுப்பிட்டு புது மாப்பிள்ளையாகும் கோபியின் மகன்.. அப்பனுக்கு பிள்ளை தப்பாம பிறந்திருக்கு

7-வது இடம் பாக்கியலட்சுமி சீரியலுக்கும், 6-வது இடம் சன் டிவியின் Mr. மனைவி சீரியலுக்கும் கிடைத்துள்ளது. அது மட்டுமல்ல டாப் 5 சீரியல்களின் லிஸ்டில் ஒரே சேனலை சேர்ந்த சீரியல்கள்தான் இடம் பிடித்து மாஸ் காட்டி உள்ளது. 5-வது இடம் ஆலியா மானசா கதாநாயகியாக நடிக்கும் இனியா சீரியலுக்கும், 4-வது இடம் அண்ணன் தங்கை பாச போராட்டத்தை அழகாக காண்பிக்கும் வானத்தைப்போல சீரியலுக்கும் கிடைத்துள்ளது.

அத்துடன் 3-வது இடம் ஆண்களின் அடிமைத்தனத்திலிருந்து வெளிவந்து துணிச்சலாக நடைபெறும் சுந்தரிக்கு கிடைத்துள்ளது. 2-வது இடம் ஆதி குணசேகரனின் அட்டூழியத்தை காட்டிக்கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியல் பெற்றுள்ளது. இதில் இருக்கும் நான்கு மருமகள்களும் தங்களுடைய சுயமரியாதையை மீட்டெடுக்க போராடுகின்றனர்.

Also Read: குணசேகரனின் 40% ஷேர் கனவை தர மட்டமாக ஆக்கிய அப்பத்தா.. இனி ஒரு ஆணியும் புடுங்க முடியாது

இதனால் இந்த சீரியல் சில மாதத்திலேயே டாப் இடத்தை பிடித்திருப்பது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. அந்த அளவிற்கு எதிர்நீச்சல் தான் இப்போது சின்னத்திரை சீரியல்களில் ஃபேவரிட் சீரியலாக மாறிவிட்டது. இதன் தொடர்ச்சியாக முதலிடம் சன் டிவியின் கயல் சீரியல் பெற்றிருக்கிறது.

இதில் அதிரடி திருப்பத்திற்கும் சுவாரஸ்யத்திற்கும் பஞ்சமில்லாமல் இருப்பதால் கடந்த சில மாதங்களாகவே முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. தற்சமயம் சன். விஜய். ஜீ தமிழ் சீரியல்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால் இனி அடுத்த வாரம் டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் எப்படிப்பட்ட மாற்றம் நிகழும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Also Read: புகழ் போதையில் விஜய்யின் அப்பாவை மட்டம் தட்டி பேசிய குணசேகரன்.. மண்டையில் ஒரு கொட்டு வைத்து அறிவுரை கூறிய விவாகரத்து நடிகர்

Trending News