டிஆர்பியில் கடும் போட்டி போடும் விஜய் டிவி, ஒளிபரப்பாகும் சீரியல்களில் சுவாரசியத்தை கூட்டுவதற்கு சீரியல்களின் கதைக்களத்தை மாற்றுகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் முழுவதும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் என்ன நடக்கப் போகிறது என்பதைப் பார்ப்போம்.
பாக்கியலட்சுமி: தற்போது விஜய் டிவியில் விறுவிறுப்பாக சீரியல் என்றால் அது பாக்கியலட்சுமி தான். இதில் பாக்யாவிற்கு ராதிகா மற்றும் கோபியின் உறவு தெரிய வந்துள்ளது. இதன்பிறகு பாக்யா இந்த துரோகத்தை தாங்க முடியாமல் நிலைகுலைந்து வீட்டிற்கு செல்கிறார். அங்கு வீட்டில் இருப்பவர்கள் கோபியை பார்க்க மருத்துவமனைக்கு சென்று விடுகின்றனர். கோபியின் அப்பா மட்டுமே வீட்டில் இருப்பார்.
இந்த விஷயம் ஏற்கனவே கோபியின் அப்பாவுக்கு தெரிந்தது என்பதை அறியாத பாக்யா, அவரிடம் எதுவும் சொல்லக்கூடாது என மறைக்கிறார். இருப்பினும் பாக்யாவின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு கோபியின் அப்பா பாக்யாவிடம் பேச்சுக் கொடுத்தாலும் அவர் வாயை திறந்த பாடில்லை. இதன் பிறகு பாக்யா இந்த விஷயத்தை வீட்டில் இருப்பவர்களிடம் தெரிவிக்காமல் கோபியை அடியோடு வெறுத்து விடுகிறார். பிறகு ராதிகா வாழ்க்கையில் நடந்த எல்லா விசயமும் பாக்யாவிற்கு தெரியும் என்பதால் இனி வரும் நாட்களில் அவளே கோபி-ராதிகா திருமணத்திற்கு தாலி எடுத்துக் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
பாரதிகண்ணம்மா: சௌந்தர்யாவின் கல்லூரி ஆசிரியை ஜானகி வயதான நிலையில் மருத்துவமனையில் அனுமதித்து இருப்பதால் மருத்துவரான பாரதி அவரைப் பரிசோதித்து அவருடைய நிலையைப் பற்றி கண்ணம்மாவிடம் சொல்கிறார். அதை ஜானகியின் கணவரிடம் சொல்ல சொல்லும்படி கண்ணம்மாவிடம் சொல்கிறார். அதன் பிறகு ஹேமா தன்னுடைய அம்மாவை பற்றி தெரிந்து கொள்வதற்காக வழக்கறிஞரிடம் தொலைபேசியில் பேச முயற்சித்தபோது பாரதி ஹேமாவை அடித்து விடுகிறார்.
பிறகு கண்ணம்மா ரோட்டில் நடந்து வரும்போது வெண்பா ஏவுதலால் கண்ணம்மாவை லாரி ஏற்ற கொல்ல முயற்சி நடைபெறுகிறது. கண்ணம்மாவின் மீது லாரி மோத வருவதை பார்த்த சௌந்தர்யா, உடனே கண்ணம்மாவை அழைத்தபோது சமையல் அம்மாவின் பெயர் கண்ணம்மா என்ற விஷயம் ஹேமாவிற்கு தெரிகிறது. அதன்பிறகு ஹேமா தன்னுடைய அப்பாவிடம் இதைப்பற்றி கேட்கிறாள்.
ராஜா ராணி 2: சீரியலில் வீட்டை விட்டு வெளியேறிய சந்தியா மற்றும் சரவணன் இருவரும் மறுபடியும் வீட்டிற்கு வந்தாலும் அவர்களை மனதார ஏற்றுக்கொள்ள சிவகாமி தயாராகவில்லை. அத்துடன் தென்காசியில் உள்ள மக்களை சாமி பெயரில் ஏமாற்றிக் கொண்டிருக்கும் பூசாரியை சந்தியா வெளுத்து வாங்குகிறார். அவரிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு அவனை போலிச் சாமியார் என சந்தியா நிரூபிக்கிறார். மேலும் சிவகாமி மற்றும் அர்ச்சனா இருவரும் சாமியாரால் ஏமாற்றம் அடைகின்றனர். வேற யாரும் சாமியாரால் ஏமாற்றம் அடைய கூடாது என்பதற்காக சந்தியா அந்த சாமியாரை ஒழிந்து கட்டுகிறாள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்: சீரியலில் முல்லைக்கு மருத்துவ செலவிற்காக கடன் வாங்கிய 5 லட்சம் தொகையை திருப்பி கட்டிவிட்டு தான் வீட்டிற்கு வருவேன் என கதிர்-முல்லை அழைத்துக்கொண்டு புது வீட்டிற்கு குடியேறுகிறார். அவர்களைப் பார்க்க தனம்-ஜீவா இருவரும் அந்த வீட்டிற்கு வருகின்றனர். பிரிந்து சென்ற கதிரை நினைத்து அப்போது தனம் மனம் வருந்துகிறார். புது வீட்டிற்கு தனம் வந்து வருத்தம் அடைவதை கதிர் பார்த்தால் நன்றாக இருக்காது என தனம் ஜீவாவை அழைத்துக்கொண்டு முல்லையை மட்டும் பார்த்துவிட்டு கிளம்புகிறார்கள்.
அதன்பிறகு கதிர் முல்லையை வீட்டிலேயே விட்டு விட்டு ஹோட்டலுக்கு வேலைக்கு செல்கிறான். மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸில் கதிர் மற்றும் உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்ட மூர்த்தி இருவரும் இல்லாததால் சிரமப்படும் ஜீவாவிற்கு தனம் முழுநேரமாக கூடவே இருந்து ஒத்தாசையாக இருப்பதுடன் கடையை சிறப்பாக நிர்வகிக்க போகிறாள்.
ஈரமான ரோஜாவே 2: காவியா-பார்த்திபன் இருவரும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காக மாமியார் பூஜை செய்கிறார். அதன் பிறகு மாமியார் தன் மீது எவ்வளவு பாசமாக இருக்கிறார்கள் என்பதை உணர்ந்த காவியா, ஆறு மாதத்திற்கு பிறகு வீட்டை விட்டு சொல்ல எடுத்த முடிவில் மாற்றம் ஏற்பட்டுவிடுமோ என கலங்குகிறாள். அந்த அளவிற்கு வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் தன் மீது பாசமாக இருப்பதால் என்ன செய்வது என்று வருத்தம் அடைகிறாள். இனிவரும் நாட்களில் காவியா நிச்சயம் பார்த்திபனை மனதார ஏற்று கணவன் மனைவியாக வாழ போகின்றனர்.
இவ்வாறு விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களின் கதைக்களத்தை ரசிகர்களுக்கு பிடித்தாற்போல் மாற்றியமைத்து, அவற்றை ஆர்வத்துடன் பார்க்க வைத்ததன் மூலம் தங்களது டிஆர்பியை எகுற செய்திருக்கின்றனர்.