வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

நாமினேஷன் ஃப்ரீ பாஸுக்காக மல்லுக்கட்டும் கேர்ள்ஸ் டீம்.. இந்த வாரம் வெளியேறப் போவது யாரு.? ஓட்டிங் ரிப்போர்ட்

Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் தர்ஷா குப்தா வீட்டை விட்டு வெளியேறினார். அதை தொடர்ந்து இந்த வார நாமினேஷனில் 9 பேர் சிக்கி இருக்கின்றனர். அதில் மூன்று பேர் டேஞ்சர் கட்டத்தில் இருக்கின்றனர்.

மேலும் தற்போது பெண்கள் அணி நாமினேஷன் பாசை யார் வாங்குவது என்ற போட்டியில் இருக்கின்றனர். ஏனென்றால் வாராவாரம் வரும் விஜய் சேதுபதியின் விமர்சனமும் பார்வையாளர்களின் கைத்தட்டலும் அவர்களை ஒரு கலவரத்திற்கு ஆளாக்கியுள்ளது.

biggboss
biggboss

அதனாலேயே ஒவ்வொருவரும் பயத்துடன் இந்த பாசை வாங்குவதற்கு மூச்சை பிடித்துக் கொண்டு பேசி வருகின்றனர். அதன்படி ஓட்டிங் நிலவரத்தில் ஜெஃப்ரி முதலிடத்தில் இருக்கிறார். அவரைத் தொடர்ந்து ஜாக்லின், அருண், ரஞ்சித் சத்யா, தீபக் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது யார்.?

இவர்களுக்கு கணிசமான ஓட்டுக்கள் கிடைத்திருக்கிறது. ஆனால் கடைசி மூன்று இடத்தில் பவித்ரா, அன்சிதா, சுனிதா இருக்கின்றனர். இவர்கள் மூவருக்கும் குறைந்த அளவிலான ஓட்டு வித்தியாசம் தான் இருக்கிறது.

இதில் சுனிதா தான் கடைசி இடத்தில் இருக்கிறார். தற்போது பார்வையாளர்களின் வெறுப்புக்கு ஆளாகி இருக்கும் இவரை எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என்பதுதான் அனைவரின் எண்ணமாக இருக்கிறது.

ஆனால் இந்த நாமினேசன் பாஸுக்காக தம் கட்டி பேசி வரும் இவர் நிச்சயம் அதை வாங்கி விடுவார் என்றே தோன்றுகிறது. அதனால் அன்சிதா இந்த வாரம் வெளியேறுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

Trending News