ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

போட்டியாளர்களை வதைத்தெடுக்கும் இந்த வார கேப்டன்.. புது புது ரூல்ஸ் போட்டு சாவடிக்கிறாங்க என கதறல்

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 50 நாட்களை எட்டி உள்ள நிலையில் இனிமேல் தான் எபிசோட் சூடு பிடிக்கும் என ரசிகர்கள் நாளுக்கு நாள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தனலட்சுமி, மற்றும் அசீம் இருவரும் இருப்பதால்தான் பிக் பாஸ் வீடு கலை கட்டுகிறது என்ற கருத்து ரசிகர்களிடம் நிலவுகிறது.

‘சும்மாவே ஆடுவ, இதுல சலங்கை வேற கட்டி விட்டாங்க’. ஏனென்றால் கேப்டன் பதவிக்கான டாஸ்க் நடைபெற்றது. இதில் அசீம் மற்றும் விக்ரமன் ஆகியோர் பங்கேற்ற நிலையில் அசீம் வெற்றி பெற்று பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

Also Read: விவாகரத்து செய்ததை மறைத்த 4 பிக் பாஸ் போட்டியாளர்கள்.. முத்தி போன வயதிலும் பிளே பாயாக இருந்த ராபர்ட் மாஸ்டர்

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் வெளியேறிய நிலையில் தற்போது 14 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். அசீம் கேப்டனாக பதவி ஏற்று ரூல்ஸ் மேல் ரூல்ஸ் போட்டு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். ஒவ்வொருவரும் டீம் பிரித்த உடன் அவர்கள் வேலையை உடனடியாக செய்யும்படி சகபோட்டியாளர்களுக்கு ஆர்டர் போடுகிறார்.

அதுமட்டுமில்லாமல் அவரவர் சாப்பிட்ட தட்டை அவர்கள்தான் கழுவ வேண்டும் என்று புதுப்புது ரூல்ஸ் போடுகிறார். படுக்கையறையில் ஆங்காங்கே இருக்கும் பொருள்களை அனைவரும் எடுத்து வைக்க வேண்டும். மெத்தை சுத்தமாக இருக்க வேண்டும் என்று ரூல்ஸ் போட்டு போட்டியாளர்களை கதற வைக்கிறார்.

Also Read: விஜய் டிவிக்கே சரியான பாடம் கற்பித்த விக்ரமன்.. தவறை மாற்றிய பிக் பாஸ்

அசீம் யாருக்காகவும் எதற்காகவும் தன்னை மாற்றிக் கொள்ளாமல் தன் மனதிற்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை செய்து வருவதால், இதற்கு முன்பு இருந்ததை விட அசீம்மிற்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது. அசீம் என்னதான் கோபக்காரராக இருந்தாலும் அவர் தன்னுடைய டாஸ்க்கை சரியாக செய்து வருகிறார்.

இந்நிகழ்ச்சியில் ராம், கதிர், ரக்ஷிதா, ஆயிஷா போன்றவர்கள் வீண் வெட்டி கதை பேசி கொண்டு இருக்காமல் விளையாட்டில் கவனம் எழுதினால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அத்துடன் இந்த வாரம் கேப்டனாக இருக்கும் அசீம் நிச்சயம் போட்டியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கூடுதல் சுவாரஸ்யம் கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கின்றனர்.

Also Read: பிக் பாஸில் இறுதி வாரம் வரை செல்லும் 5 போட்டியாளர்கள்.. நமிதா மாரிமுத்து விட்ட இடத்தை பிடித்த சிவின்

Trending News