சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

இந்த வாரம் சுடசுட ரெடியான நாமினேஷன் லிஸ்ட்.. 10 பேரில் கமுக்கமா மிச்சர் தின்னுட்டு வெளியேறும் அந்த நபர்

4 வாரங்களைக் கடந்த பிக் பாஸ் சீசன்6 நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்ட் தற்போது வெளியாகி உள்ளது. இதில் எதிர்பார்த்த ஒரு சிலர் இடம்பெறாவிட்டாலும் பிறரை குற்றம் சாட்டி விளையாடுபவரும், ஓவர் ரியாக் செய்தவர்களும், அவர்களாகவே பிரச்சனையை உருவாக்குபவர்களும், விதிமுறைகளை பின்பற்றாதவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

அதாவது இந்த வார நாமினேஷன் லிஸ்டில் அதிக வாக்குகளில் ஓட்டுக்களில் இருந்து குறைந்த ஓட்டுக்கள் என்ற அடிப்படையில், வாரத்தின் முதல் நாளான இன்று எவிக்சன் ப்ராசஸில் இடம்பெற்றோரின் நாமினேஷன் லிஸ்ட் சுடச்சுட ரெடியாகி உள்ளது.

Also Read: பிக்பாஸ் எலிமினேஷனில் நடந்த டிவிஸ்ட்.. பரபரப்பை ஏற்படுத்தும் இன்றைய எபிசோட்

இதில் விக்ரமன், ரக்ஷிதா, கதிரவன், அசீம், தனலட்சுமி, சிவின், நிவாஷினி, ஆயிஷா, ஜனனி மற்றும் ஏடிகே உள்ளிட்ட 10 பேர் தேர்வாகியுள்ளனர். இதில் வீட்டில் சர்ச்சையை கிளப்பும் விக்ரமன், தனலட்சுமி, அசீம் உள்ளிட்டருக்கு வாக்குகளை ரசிகர்கள் அள்ளி கொடுக்கப் போகின்றனர்.

அதே சமயம் பிக் பாஸ் சீசன்6 நிகழ்ச்சி துவங்கியதில் இருந்து இப்போது வரை எந்த பிரச்சனையிலும் தலையிடாமல் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஏதோ ஒரு பொருள் போல் இருக்கின்ற இடம் தெரியாமல் இருக்கும் கதிரவன் தான் இந்த வாரம் குறைந்த ஓட்டுகள் கிடைத்து பிக் பாஸ் வீட்டில் வெளியேறுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

Also Read: டாஸ்கில் அலட்சியம், விதி மீறல்.. இன்றைய பிக்பாஸில் கொதித்துப்போய் எச்சரித்த கமல்

இதே போன்று தான் செரின் பிக் பாஸ் வீட்டில் எந்தவித சுவாரசியத்தையும் கொடுக்காததால், அவர் கடந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டார். அதேபோன்றுதான் கதிரவன் அல்லது ஆயிஷா வரும் வாரத்தில் எலிமினேட் ஆகப் வாய்ப்பு அதிகமா உள்ளது.

மேலும் இந்த நாமினேஷன் லிஸ்டில் மைனா, மகேஸ்வரி, ராபர்ட் மாஸ்டர் உள்ளிட்ட தப்பித்தது எப்படி என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆகையால் இந்த 10 பேரில் யாருக்கு அதிக ஓட்டு கிடைக்கிறது என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

Also Read: ஒட்டுமொத்த வெறுப்பையும் சம்பாதித்த போட்டியாளர்.. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் ஆஸ்கர் நாயகி

Trending News