வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் 5 இடத்தைப் பிடித்த சீரியல்.. அந்தரத்தில் தொங்கும் கதாநாயகன்

Top 6 Serial Trp Rating: சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் எந்த சீரியல் மக்கள் மனதில் அதிகமான இடத்தை பிடித்திருக்கிறது. எந்த சீரியலுக்கு அதிக அளவில் வரவேற்பு கிடைக்கிறது என்பதை ஒவ்வொரு வாரமும் வெளிவரும் டிஆர்பி ரேட்டிங் இன் படி பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் ஆறு இடத்தை பிடித்த சீரியல்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

கயல் : கடந்த சில வாரமாக கயல் சீரியல் தான் முதல் இடத்தில் இருக்கிறது. அதுபோல இந்த வாரமும் 9.59 புள்ளிகளை பெற்று முன்னணியில் இருக்கிறது. தற்போது கயலை பழிவாங்க கல்யாணத்தில் பிரச்சனை பண்ண வேண்டும் என நினைத்த பெரியப்பாவையும் மாற்றி தன் வழிக்கு கொண்டு வரும் விதமாக கயல், பெரியப்பா மனதில் இடம் பிடித்து வருகிறார். இதனை தொடர்ந்து அடுத்த வாரம் எழில், கயல் கழுத்தில் தாலி கட்டும் விதமாக கிளைமேக்ஸ் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.

மூன்று முடிச்சு: ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடித்து மக்கள் மனதிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் 8.35 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இன்னும் அடுத்து வரும் வாரங்களில் முதல் இடத்தை நிச்சயமாக பிடித்து விடும். அதிலும் தற்போது சூர்யா, அர்ச்சனா கழுத்தில் தாலி கட்டாமல் நந்தினி கழுத்தில் தாலி கட்டும் விதமாக கதை சூடு பிடித்து வருகிறது.

சிங்க பெண்ணே: இந்த நாடகத்திற்கு இப்படி ஒரு நிலைமையா என்று சொல்வதற்கு ஏற்ப இதில் கதாநாயகனாக இருந்த அன்பு கடந்த சில நாட்களாக வரவில்லை. இதனால் மக்கள் இந்த நாடகத்தை பார்ப்பதை வெறுத்து விட்டார்கள். எப்பொழுது அன்பு வந்து அழகன் நான்தான் என்கிற உண்மை ஆனந்தியிடம் சொல்லப் போகிறார் என்பதை பார்க்கும் அந்த நாளுக்காக மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது இந்த வாரம் 8.26 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்திற்கு போயிருக்கிறது.

மருமகள் மற்றும் சுந்தரி: இந்த இரண்டு சீரியல்களுமே கடந்த சில வாரங்களாக முன்னுக்கு பின்னே போய்க்கொண்டே வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் இந்த இரண்டு சீரியல்களும் 7.85 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது. மருமகள் சீரியலில் பிரபு மற்றும் ஆதிரையின் கல்யாணமும், சுந்தரி சீரியலில் சுந்தரிக்கும் வெற்றிக்கும் எப்பொழுது கல்யாணம் என்பதை பார்க்கும் விதமாக மக்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சிறகடிக்கும் ஆசை: விஜய் டிவியில் இந்த ஒரு நாடகம் தான் டிஆர்பி ரேட்டிங்கில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு புள்ளிகளை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் 7.76 புள்ளிகளைப் பெற்று ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக இருக்கும் முத்து மற்றும் மீனாவின் நடிப்பு மக்களை கவர்ந்ததினால் அவர்களுக்காகவே இந்த நாடகத்தை பார்த்து வருகிறார்கள்.

இருந்தாலும் சிங்க பெண்ணே மற்றும் சிறகடிக்கும் ஆசை சீரியலில் அதிக அளவில் மக்கள் தூக்கி கொண்டாடுவதற்கு காரணம் இந்த இரண்டு சீரியல்களிலும் கதாநாயகனாக நடிக்கும் அன்பு மற்றும் முத்துவின் கதாபாத்திரத்திற்காக மட்டுமே. அந்த வகையில் இவர்களுக்கு இன்னும் அதிகளவில் முக்கியத்துவம் கொடுத்தால் டிஆர்பி ரேட்டிங்கில் அதிரடியாக மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

Trending News