Serial Trp Rating List: ஒவ்வொரு வாரமும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் எந்த சீரியல் மக்கள் மனதை அதிகமாக கவர்ந்திருக்கிறது என்பதை டிஆர்பி ரேட்டிங்கின் படி பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் வெளியான தகவலின் படி எந்த சீரியல்கள் முதல் ஆறு இடத்தை தொட்டிருக்கிறது என்பதை பற்றி ஒரு தொகுப்பாக பார்க்கலாம்.
சிங்க பெண்ணே: என்னதான் தங்கத் தட்டாக இருந்தாலும் பசித்தால் தான் சாப்பிட முடியும் என்ற ஒரு சொலவடை உண்டு. அதுபோலத்தான் மகேஷ், பணம் வசதியுடன் உச்சாணிக்கொம்பில் இருக்கிறார் என்பதற்காக ஆனந்தி காதலித்தட முடியாது. ஏனென்றால் ஏற்கனவே ஆனந்தி மனதிற்குள் அழகனாக அன்பு குடிபுகுந்து விட்டார். இது தெரியாமல் இத்தனை நாளாக ஆனந்தி பின்னாடி சுற்றிக் கொண்டிருந்த மகேஷ் தற்போது ஆனந்தி அன்பு காதல் விவகாரம் தெரிந்த பின்பு கூட பிடிவாதமாக கோபத்துடன் இருக்கிறார். இதனால் மகேஷை எப்படி சரி செய்து ஆனந்தி அன்பு காதல் கைகூட போகிறது என்பது விறுவிறுப்பாக இருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 9.30 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் இருக்கிறது.
மூன்று முடிச்சு: நந்தினி சூர்யா தனியாக நேரத்தை செலவழித்தால் அவர்களுக்குள் புரிதல் ஏற்படும் என்று எண்ணிய சூர்யாவின் அப்பா இவர்களை ரெசார்ட்டுக்கு அனுப்பி வைத்தார். ஆனால் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட அர்ச்சனா, நந்தினி சூர்யாக்கு இடையில் வந்து ஆர்ப்பாட்டம் பண்ண ஆரம்பித்து விட்டார். அர்ச்சனாவை பற்றி புரிந்து கொள்ளாத நந்தினியும் அர்ச்சனா செய்யும் விஷயத்துக்கு எல்லாம் தலையாட்டிக் கொண்டிருக்கிறார். இப்பொழுது தான் சூர்யாவுக்கும் நந்தினிக்கும் கொஞ்சம் புரிதல் ஆரம்பித்தது அதையும் கெடுக்கும் விதமாக அர்ச்சனா புகுந்து விட்டார். இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 9.05 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
கயல்: தேவியை கடத்தி கொலை முயற்சி செய்தது பெரியப்பாவின் மகன் சுப்ரமணியனாக இருந்தாலும் இதற்கு பின்னணியில் இருந்து தூண்டியது செங்குட்டுவன் தான் என்ற உண்மை கயல் குடும்பத்திற்கு தெரிந்து விட்டது. இருந்தாலும் கயல் வழக்கம் போல் இந்த விஷயத்தை பொறுமையாக டீல் பண்ணலாம் என்று மூர்த்தியை அடக்கி வைத்திருக்கிறார். கல்யாணம் ஆன பிறகு அவ்வப்போது இந்த மாதிரி ஒரு ரொமான்ஸ் இருந்தால் நல்லா இருக்கும் என்று சொல்வதற்கு ஏற்ப கயல் மற்றும் எழிலின் ரொமான்ஸ் தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 8.80 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
மருமகள்: ஒரு வழியாக ஆதிரை மற்றும் பிரபுவுக்கு வந்த பிரச்சனை எல்லாம் முடித்துவிட்டு மறுபடியும் வீடு திரும்பி விட்டார்கள். ஆனாலும் இவர்களுடைய சண்டைகளுக்கு மட்டும் பஞ்சமே இல்லை என்பதற்கு ஏற்ப தொடர்ந்து பிரச்சனைகள் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 8.48 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது.
சிறகடிக்கும் ஆசை: வர வர மாமியாரு கழுதை போல ஆனாளாம் என்ற பழமொழிக்கு ஏற்ப ஆரம்பத்தில் இந்த சீரியலை தூக்கி கொண்டாடிய மக்கள் தற்போது வெறுக்கும் அளவிற்கு தான் கதை நகர்ந்து வருகிறது. ரோகிணி பற்றிய விஷயங்களும் வெளிவந்த பாடாக இல்லை மீனா மற்றும் முத்துவுக்கும் பிரச்சனைகள் ஓய்வதாகவும் இல்லை. தொடர்ந்து இவர்கள் அவமானத்தையும் பிரச்சனைகளையும் மட்டுமே சந்தித்து வருகிறார்கள். அந்த வகையில் மீனாவின் பிசினஸை கெடுக்கும் விதமாக சிந்தாமணியுடன் விஜயா கூட்டணி வைத்து விட்டார். இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 7.78 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.
எதிர்நீச்சல் 2: இரண்டாம் பாகம் முதல் சீசனை மாதிரி இல்லை என்று மக்கள் தொடர்ந்து கமெண்ட் பண்ணிட்டு இருந்தார்கள். ஆனால் தற்போது சக்தியின் அதிரடியான பேச்சும் செயலும் மக்களை கவர்ந்ததால் கடந்த வாரம் எதிர்நீச்சல் இரண்டாம் பாகம் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் சக்தி பேச்சுக்கு இணங்க குணசேகரன் மறுபடியும் வீட்டிற்குள் நுழையப் போகிறார். இனி ஆடு புலி ஆட்டம் தான் என்பதற்கு ஏற்ப குணசேகரன், கதிர், சக்தி மற்றும் நான்கு பெண்களின் பரமபதம் ஆரம்பமாகப் போகிறது. அதனால் எப்படியோ இந்த வாரம் தட்டு தடுமாறி 7.35 புள்ளிகளைப் பெற்று ஆறாவது இடத்தை பிடித்து விட்டது.