Serial TRP Rating List: சின்னத்திரை மூலம் வரும் சீரியலுக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறார்கள். அதனால் சீரியல் மூலம் டிஆர்பி ரேட்டிங் அதிகரிக்கலாம் என்ற நோக்கத்தில் சன் டிவி விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் சேனல்கள் போட்டி போட்டு புது புது சீரியல்களை கொண்டு வருகிறார்கள். ஆனாலும் முதல் ஐந்து இடத்தில் வழக்கமாக இருக்கும் சீரியல்கள் மட்டுமே இடம் பிடித்து வருகிறது. முக்கியமாக சன் டிவி தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. அந்த வகையில் எந்த சீரியல்கள் எவ்வளவு புள்ளிகளை பெற்று இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
சன் டிவியில் தொடர்ந்து முதலிடத்தில் தக்கவைத்துக் கொண்டு வருவது சிங்க பெண்ணே சீரியல். இதில் அன்பு மற்றும் ஆனந்தியின் கெமிஸ்ட்ரிக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்து வருகிறது. அதனாலயே இந்த ஒரு சீரியல் மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டது. தற்போது மகேஷ் எப்படியாவது ஆனந்தியே கல்யாணம் பண்ண வேண்டும் என்று எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் ஆனந்தி மற்றும் அன்பு குற்ற உணர்ச்சியில் தவித்து வருகிறார்கள். அந்த வகையில் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 9.92 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் இருக்கிறது.
அடுத்ததாக மூன்று முடிச்சு சீரியலில் எப்பொழுதும் கையில் மதுவை வைத்துக் கொண்டு குடிப்பழத்திற்கு ஆளாகி நிதானம் இல்லாமல் தள்ளாடும் சூர்யாவை திருத்தும் முயற்சியில் நந்தினி பிளான் பண்ணி ஒவ்வொரு காரியத்தையும் சாதித்து வருகிறார். ஆனால் இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட அர்ச்சனா, சூர்யாவை பழைய மாதிரி குடிக்க வைக்க வேண்டும் என்பதற்கு திட்டம் தீட்டி காய் நகர்த்தி வருகிறார். இதில் இருந்து நந்தினி எப்படி சூர்யாவை காப்பாற்றப் போகிறார் என்பது விறுவிறுப்பான கதையுடன் நகர்கிறது. அந்த வகையில் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 9.73 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து கயல் சீரியலில் தேவி ஆசைப்பட்ட மாதிரி வளைகாப்பை நல்லபடியாக நடத்த வேண்டும். அத்துடன் வளைகாப்புக்கு அவருடைய கணவரையும் சமரசம் செய்து கூட்டிட்டு வரவேண்டும் என்று கயல் வாக்குறுதி கொடுத்திருக்கிறார். இதற்கிடையில் ஷாலினி சாப்பிட்ட உணவில் விஷம் கலந்திருப்பதால் அன்பு, அம்மாவை காயப்படுத்தும் அளவிற்கு பேசி விடுகிறார். பின்பு இதற்கு காரணம் யாராக இருக்கும் என்று கயல் எழில் கண்டுபிடிக்க போகிறார்கள். அந்த வகையில் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 9.28 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
அடுத்ததாக மருமகள் சீரியலில் பிரபுவின் கஞ்சித்தனத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டு வர வேண்டும் என்று ஆதிரை போராடி வருகிறார். அத்துடன் இரண்டு பேருக்கும் சண்டை வந்து பிரிய வேண்டும் என்று பல சூழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதையெல்லாம் முறியடித்து ஆதிரை எடுத்து வைக்கும் விஷயத்தில் எப்படி வெற்றி அடையப் போகிறார் என்பது தான் சுவாரசியமாக நகர்ந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 8.46 புள்ளிகளைப் பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது.
இதனை தொடர்ந்து விஜய் டிவியில் இந்த ஒரு சீரியல் தான் முதல் இடத்திலும் மொத்தமாக டிஆர்பி ரேட்டிங்கில் 8.14 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்திலும் சிறகடிக்கும் ஆசை சீரியல் இடம் பிடித்திருக்கிறது. ரோகிணி பற்றிய விஷயங்கள் வெளிவராமல் கதையை இழுத்து அடிக்கணும் என்பதற்காக மீனா மற்றும் முத்துவின் பிசினஸ் பண்ணுவதையும் ரோகிணி, எப்படி மனோஜ் கஷ்டப்படும் நேரத்தில் உதவி பண்ணுகிறார் என்ற விஷயத்தையும் காட்டும் விதமாக கதை நகர்ந்து வருகிறது.
மேலும் அன்னம் சீரியல் 7.53 புள்ளிகளைப் பெற்று ஆறாவது இடத்திலும், எதிர்நீச்சல் இரண்டாம் பாகம் 7.23 புள்ளிகளை பெற்று ஏழாவது இடத்திலும் இருக்கிறது. ஒரு நேரத்தில் எதிர்நீச்சல் சீரியல் மக்களின் பேவரைட் சீரியலாக கொண்டாடப்பட்டு டிஆர்பி ரேட்டிங்கில் சிம்மாசனத்தில் ஜொலித்தது. ஆனால் தற்போது முதல் ஐந்து இடத்தை பிடிக்காமல் தத்தளித்துக் கொண்டு வருகிறது.