ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

பிரசாந்தை தூக்கி விட தியாகராஜன் இயக்கிய 5 படங்கள்.. இத்தனை பிளாப் மூவியா

1981 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் தியாகராஜன். இவர் மலையூர் மம்பட்டியான், பூவுக்குள் பூகம்பம் போன்ற படங்களில் நடித்து இருக்கிறார். இவர் வைகாசி பொறந்தாச்சு என்னும் படத்தின் மூலம் தன்னுடைய மகன் பிரசாந்தை ஹீரோவாக்கினார். மகனை எப்படியாவது சினிமாவில் வளர்த்துவிட வேண்டும் என தியாகராஜன் டாப் ஸ்டார் பிரசாந்துக்காக இயக்குனராக, தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார்.

ஆணழகன்: சித்ரம் பலேரே விசித்ரம் என்ற தெலுங்கு படத்தின் தழுவலாக வந்தது தான் 1995 ஆம் ஆண்டு ரிலீசான ஆணழகன் திரைப்படம். சுநேஹா, மணிவண்ணன், கே.ஆர். விஜயா, வடிவேலு ஆகியோர் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படம் மிகப்பெரிய சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

Also Read: இப்போதுள்ள ஹீரோயின்கள் கூட ஜொள்ளுவிடும் 90’s ஹீரோக்கள்.. ராம்கி ஹேர் ஸ்டைலை இன்றும் மறக்காத குஷ்பூ

ஷாக்: பூட் என்னும் ஹிந்தி திரைப்படத்தின் மறு தயாரிப்பு தான் ஷாக். இந்த படம் 2004 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. பிரசாந்த், மீனா, திவ்யதர்ஷினி, சுஹாசினி, சரத்பாபு ஆகியோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படம் திகில் திரைப்படம் ஆகும். தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் நடித்த இந்த படம் எதிர்பார்த்த வெற்றியடையவில்லை.

பொன்னர்சங்கர்: கொங்கு நாட்டில் அண்ணமார் சாமி கதை என்றழைக்கப்படும் இருவரின் கதை தான் பொன்னர் சங்கர். இந்த கதையை கலைஞர் ஏற்கனவே புத்தகமாகவே வெளியிட்டு இருந்தார். இந்த படத்தில் பிரசாந்த் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். பொன்னர் சங்கர் திரைப்படம் பிரசாந்த்திற்கு தோல்விப் படமாகவே அமைந்தது.

Also Read: பிரசாந்த் படத்தை தவறவிட்ட விஜய்.. தளபதி நடிச்சிருந்தா செமையா இருந்திருக்கும்

மம்பட்டியான்: தியாகராஜன், சரிதா நடித்த மலையூர் மம்பட்டியான் படத்தின் ரீமேக் தான் மம்பட்டியான், இந்த படத்தில் பிரசாந்த், மீரா ஜாஸ்மின், பிரகாஷ் ராஜ், வடிவேலு மற்றும் முமைத் காண் ஆகியோர் நடித்திருந்தன்னார். தொடர் தோல்விகளை கொடுத்து வந்த பிரசாந்துக்கு இந்த படமும் தோல்வியாகவே அமைந்தது.

அந்தகன்: மார்க்கெட்டை இழந்து பல வருடமாக நல்ல படம் கொடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் பிரசாந்துக்கு இரண்டாவது இன்னிங்சாக உருவாகி கொண்டிருக்கும் படம் தான் அந்தகன். இந்த படம் ‘அந்தாதூன்’ என்னும் பாலிவுட் படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தை பிரசாந்தின் அப்பா தியாகராஜன் தயாரிக்கிறார். சிம்ரன், பிரியா ஆனந்த், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படம் வரும் ஜனவரியில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: பிரசாந்த் வெற்றிக்கு காரணம் வடிவேலு.. இது என்ன புது புரளியா இருக்கு

Trending News