திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

அவ்வளவு தான் மரியாதை ஓடிப் போயிரு.. கண்கள் சிவக்க மிரட்டிய சிவாஜி

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் தியாகராஜன். நடிகர் பிரசாந்தின் தந்தையான இவர் திரையுலகிற்கு நடிகர் பிரஷாந்தை அறிமுகம் செய்து வைத்தவர். தற்போது பல குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் தியாகராஜன் நடிகர் திலகம் சிவாஜிகணேசனுடன் தான் நடித்த அனுபவங்களை பற்றி பகிர்ந்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 1983ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான மலையூர் மம்பட்டியான் திரைப்படம் இவரது திரை வாழ்க்கையை புரட்டிப் போட்ட படமாக பார்க்கப்படுகிறது. அன்றைய காலகட்டத்தில் இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம். இதனிடையே 1982ஆம் ஆண்டு இயக்குனர் பிரகாஷ் ராவ் இயக்கத்தில் வெளியான கருடா சௌக்கியமா திரைப்படத்தில் தியாகராஜன் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் இணைந்து நடித்திருப்பார்.

இந்த திரைப்படத்தின் அனுபவங்களை பற்றி தற்போது பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். நடிகர் சிவாஜி ஷூட்டிங் வந்தால் அவர் ஷூட்டிங் முடியும் வரை வேறு எங்கும் செல்ல மாட்டார். காலை 6 மணிக்கு வந்துவிட்டு மேக்கப் எல்லாம் போட்டு விட்டு தன்னை சுற்றி என்னவெல்லாம் நடக்கிறது என்பதை பார்ப்பார்.

பின்னர் டைரக்டர் ஸ்கிரிப்ட் கொடுக்கும் போது அதை வாங்கி படிப்பார். இப்படித்தான் ஒருமுறை இந்த திரைப்படத்தில் ஒரு பெரிய அளவிற்கு ஸ்கிரிப்ட் இருந்தது. இதை என்னை சிவாஜி கணேசன் படிக்க கூறினார். நானும் படித்துக் காட்டினேன். பின்னர் சிவாஜி கணேசன் இடம் நான் இன்னொரு முறை படிக்கட்டுமா என்று கேட்டேன். உடனே, சிவாஜி கணேசன் தன் கண்களால் மிரட்டி, டேய் போடா அவ்வளவு தான் மரியாதை. என்று என்னை விரட்டினார்.

பின்னர் கேமரா முன்பு போய் சிவாஜி கணேசன் ஒரே டேக்கில் மாடுலேஷன் மாறாமல் அந்த டயலாக்கை கூறினார். இதைப்பார்த்த தியாகராஜன் திகைத்துப் போனதாக குறிப்பிட்டார். சிவாஜிக்கு நடிப்பில் மட்டுமில்லாமல் டெக்னிகலாக திறமை உள்ளதாக கூறியுள்ளார். மேலும், சிவாஜிக்கு தன்னுடைய குடும்பம் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் பிள்ளைகள் என்றால் மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்தார்.

அதே சமயத்தில் சிவாஜியின் மகனான நடிகர் பிரபுவும் சிவாஜியை போலவே நல்ல மனம் கொண்டவர். மிகவும் பாசமாக பழகக்கூடியவர். தன்னை அண்ணன் என்று அன்பாக அழைத்து இன்றளவும் பாசமாக பேசுவார். மேலும் தன்னுடைய இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் கடந்த 2018ல் வெளியான ஜானி படத்தில் டிரெயின் சீக்வென்ஸ் இருந்தது. அப்போது இரவு 11 மணி ஆன நிலையில் பிரபுவிற்கு அந்த சீன் முடிந்துவிட்டதாம். ஆனால், பிரபு தன் ஷூட்டிங் டைம் முடிந்த நிலையில் தனக்காக கூடவே இருந்து உதவிபுரிவார்.

அந்த அளவிற்கு அற்புதமான நடிகர் என்று தியாகராஜன் கூறியுள்ளார். மேலும் இயக்குனர் தியாகராஜன் தற்போது தன் மகனான நடிகர் பிரசாந்தின் அந்தகன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். பாலிவுட்டில் ஏற்கனவே எடுக்கப்பட்ட இத்திரைப்படம் தமிழில் ரீமேக் திரைப்படமாக உருவாகி கொண்டிருக்கிறது. நடிகை சிம்ரன், பிரியா ஆனந்த் உள்ளிட்டோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

Trending News