வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

செவுத்துல அடிச்ச பந்து போல பாலிவுட்டில் இருந்து மீண்டு வந்த 5 பிரபலங்கள்.. வளர விடாமல் துரத்தி அடிக்கப்பட்ட அவமானம்!

Bollywood: கோலிவுட்டில் பல வெற்றிகளை ருசித்துக் கொண்டிருந்த சமயத்தில் ஹிந்தி படங்களிலும் தங்களது திறமையை காட்ட வேண்டும் என ஆசை ஆசையாய் பாலிவுட் சென்ற 5 பிரபலங்களை வளர விடாமல் துரத்தி அடித்து இருக்கின்றனர். அவர்கள் யார் யார் என்பதை பார்ப்போம்.

இயக்குனர் ஸ்ரீதர்: தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற படங்களை தயாரித்தும் இயக்கியும் புகழ்பெற்றவர் தான் சி.வி. ஸ்ரீதர். இவர் பாலிவுட்டிலும் பெரும் வெற்றியினை ஈட்டினாலும் அதற்காக அவர் பெரிதும் போராட வேண்டியதாக இருந்தது. தமிழில் அசால்டாக கல்யாண பரிசு, தேன்நிலவு என ஏகப்பட்ட படங்களை இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்த ஸ்ரீதருக்கு ஹிந்தியில் தட்டு தடுமாறி தான் வெற்றியை சுவைக்க முடிந்தது.

சின்னப்ப தேவர்: 60 மற்றும் 70களில் புகழ்பெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமானவர் தான் எம்.எம். ஏ. சின்னப்பா தேவர். இவர் மிகக் குறுகிய காலத்தில் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான பல வெற்றி படங்களை தயாரித்து கல்லா கட்டியவர். இவருடைய படங்களில் பெரும்பாலும் விலங்குகளை நடிக்க வைத்து தன்னுடைய படங்களுக்கென்று தனி அடையாளத்தை வகுத்தவர். எம்ஜிஆரை வைத்து மட்டும் சுமார் 17 படங்களை தயாரித்திருக்கிறார்.

இவ்வாறு தமிழில் தேவர் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி பல வெற்றிகளை கண்ட சின்னப்பா தேவர், ஹிந்தி திரையுலகிலும் பிரபல நடிகர் ராஜேஷ் கண்ணா நடிப்பில் ‘ஹாத்தி மேரே சாத்தி’ என்ற வெற்றி படத்தை 1971ல் வழங்கினார். இந்த ஒரு படத்தின் வெற்றிக்கு பிறகு மறுபடியும் அவர் படங்களை தயாரிக்க நினைத்தாலும் சரியான வாய்ப்பு அமையாததால் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு வந்துவிட்டார்.

Also Read: விக்ரம் படத்தின் இரண்டு முக்கிய கேரக்டர்களை லியோவில் இறக்கும் லோகேஷ்.. அப்போ LCU கன்பார்ம்

ஜி என் வேலுமணி: சிவகுமார், கேஆர் விஜயா நடிப்பில் வெளியான ‘அன்னை அபிராமி’ மற்றும் முத்துராமன், கேஆர் விஜயா நடிப்பில் வெளியான ‘நம்ம வீட்டு தெய்வம்’ போன்ற படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் ஜி.என். வேலுமணி. இவர் 70களில் முன்னணி இயக்குனராக ரவுண்டு கட்டிக் கொண்டிருந்ததால் தமிழைப் போலவே ஹிந்தி படங்களையும் இயக்க ஆசைப்பட்டு பாலிவுட்டிற்கு சென்றார். ஆனால் அங்கு அவருக்கு போதிய வரவேற்பு கிடைக்காததால் செவுத்துல அடித்த பந்து போல் மறுபடியும் தமிழ் படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டினார்.

கமலஹாசன்: இப்போது இருக்கும் இளம் நடிகர்களுக்கெல்லாம் நடிப்பை கற்றுக் கொடுக்கும் ஆசனாக இருக்கக்கூடியவர் தான் உலகநாயகன் கமலஹாசன், நாலு வயதில் தனது திரை பயணத்தை குழந்தை நட்சத்திரமாக துவங்கி, 4 முறை தேசிய விருதை வென்றவர். தமிழில் மட்டுமல்ல மலையாளம், ஹிந்தி, தெலுங்கு என பிறமொழி படங்களிலும் நடித்திருக்கிறார். இதனால் இவரை பான் இந்தியா ஸ்டார் என்றே அழைக்கின்றனர். இருப்பினும் இவருக்கு தமிழில் கிடைத்த அளவு பாலிவுட்டில் கிடைக்கவில்லை. இவர் 1977 ஆம் ‘ஆய்ணா’ என்ற படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ஹிந்தி திரை உலகிற்கு அறிமுகமானார். அந்த படத்திற்குப் பிறகு 1983 ஆம் ஆண்டு ‘ஏக் தூஜே கே லியே’ என்ற படத்தில் வாசு என்ற கேரக்டரில் முழு நேர கதாநாயகனாக நடித்திருப்பார். இந்த படத்தை கே பாலச்சந்தர் தான் இயக்கினார்.

ஆனால் இந்த படத்திற்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு ரசிகர்களின் மத்தியில் கிடைக்கவில்லை. இருப்பினும் அடுத்த வருடம் மறுபடியும் கமலஹாசன் ஹிந்தியில் ‘ஏ தோ கமால் ஹோகயா’ என்ற படத்திலும் நடித்தார். அந்த படத்திருக்கும் எதிர்பார்த்த அளவு வசூல் கிடைக்கவில்லை. அப்படியும் பாலிவுட்டை விட்டு வர முடியாத கமல் அடுத்தடுத்து சாரா சி சிந்தகி, சத்மா, யேக் தேஸ், ஏக் நய் பகெலி, யாட்கர், ராஜ் திலக், ஜிராப்டார், தேக் பியர் தும்காரா போன்ற படங்கள் அனைத்தும் அவருக்கு படு தோல்வியை தந்தது. அதன் பிறகு தான் கமல் நமக்கு பாலிவுட் சரிப்பட்டு வராது என்று மறுபடியும் கோலிவுட்டில் தொடர்ந்து படங்கள் நடித்து இப்போது வரை டாப் நடிகராக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கிறார். உண்மையாகவே கமலை பாலிவுட்டில் வளர விடாமல் துரத்தி அடித்து அவமானப்படுத்தும் அளவுக்கு அவருடைய படங்களை நிராகரித்தனர்.

Also Read: பிரகாஷ் ராஜை வளரவிடாமல் தடுத்த தில் ராஜு.. மகனை தூக்கி விடுவதற்கு ஓரம் கட்டிய கொடுமை

பிரகாஷ்ராஜ்: நடிகர், இயக்குனர், தொலைக்காட்சி தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட பிரகாஷ்ராஜ், தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி போன்ற படங்களிலும் நடித்து வந்தார். அதேபோல ஹிந்தியில் தன்னுடைய நடிப்பு திறமையை காட்டி கலக்க வேண்டும் என நினைத்தார். இவர் 2012 ஆம் ஆண்டு சல்மான் கான் நடிப்பில் வெளியான டபாங் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால் ஹிந்தியில் பிரகாஷ்ராஜின் பருப்பு வேகல என்று தான் சொல்லணும். இவருக்கு தென்னிந்திய படங்களில் கிடைத்த வரவேற்பு ஹிந்தியில் கிடைக்காமல் போனது. இதனால் அவர் பாலிவுட் பக்கமே போகக்கூடாது என்று, தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் ரவுண்ட் கட்டி நடித்துக் கொண்டிருக்கிறார்

இவ்வாறு இந்த 5 பிரபலங்களுக்கு தான் பாலிவுட் செட்டாகல. ஆனால் அங்கு ஸ்ரீதேவி முதல் பல ஹீரோயின்கள் வெற்றி பெற்று செட்டில் ஆகிவிட்டனர். அதற்கு காரணம் அங்கு உள்ளவர்களை திருமணம் செய்ததால் தான். அதேபோல் பிரபு தேவா உள்ளிட்ட இன்னும் பல இயக்குனர்கள் வெற்றி பெற்றாலும் நீடித்து நிற்க விடவே மாட்டார்கள் என்பது உண்மை.

Also Read: எம்ஜிஆருக்கு பிடிக்காத நடிகர்.. உயிருக்கு பயந்து கலைஞரிடம் அடைக்கலம் சென்றார்!

Trending News