Vijayakanth: பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்று இல்லாமல் ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நம் விஜயகாந்த் வாழ்ந்து காட்டியிருக்கிறார். அதற்கு உதாரணம்தான் அவர் இறந்த பின்னும் அவருடைய பிரிவை தாங்க முடியாமல் இன்னும் கண்ணீர் சிந்துகிறோம். ஆனாலும் தற்போது அனைவரும் ஒரு குற்ற உணர்ச்சியில் தவித்து வருகிறோம்.
அவர் நல்லா இருக்கும் பொழுது எத்தனையோ நல்ல விஷயங்களை சொல்லி மக்களுக்காக நல்லது செய்ய வேண்டும் என்று போராடிய நிலையில் பலரும் அவரைக் கேலி கிண்டலும் செய்து ஒரு கோமாளியாக சித்தரிக்கப்பட்டு விட்டார்கள். அதனால் தான் என்னமோ போதும் இந்த நன்றி கெட்ட மக்களுக்கு நீ செய்தது ரெஸ்ட் எடுத்துக்கோ என்று இறைவன் அவருக்கு அழைப்பு கொடுத்து விட்டார்.
தற்போது இவரை பற்றி ஒவ்வொரு விஷயங்களும் வெளிவரும் பொழுது நெஞ்சமெல்லாம் பதறுகிறது. இப்படி ஒரு மனிதனுக்கு வாய்ப்பு கொடுக்க தவறி விட்டோமோ என்று. இருந்தாலும் இவர் காட்டிய நல்ல விஷயங்கள் பலரையும் தற்போது மாற்றிக் கொண்டு வருகிறது. அதுதான் இவர் வாழ்ந்த வாழ்க்கைக்கு அடையாளமாகவும், இவர் செய்த தர்மத்தையும் அனைவரையும் செய்ய தூண்டுகிறது.
Also read: என்ன கொடுமடா இது! விஜயகாந்துன்னு சொல்லிட்டு இமான் அண்ணாச்சி உருவத்தில் திறந்த சிலை
அதனால் தான் இவருடைய இறப்பை கேட்டதும் இவருக்கு ஏதாவது ஒரு விதத்தில் நன்றி கடன் செலுத்த வேண்டும் என்று பலரும் தானாக வந்து உதவி செய்திருக்கிறார்கள். அந்த வகையில் சேலம் ஆர்ஆர் பிரியாணி ஓனர் கிட்டத்தட்ட 5 லட்சம் சாப்பாடு மற்றும் தண்ணீர் பாட்டில் கொடுத்து இருக்கிறார். இவரிடம் யாருமே எந்த உதவியும் கேட்கவில்லை தானாக வந்து செய்திருக்கிறார்.
அதே மாதிரி விஜயகாந்துக்கு போடப்பட்ட மாலைகள் மற்றும் பூக்கள் அனைத்தும் ஒரு ரூபாய் கூட வாங்காமல் கோயம்பேடு மலர் வியாபாரி சங்கத்தினர் கொடுத்து இருக்கிறார்கள். மேலும் கோயம்பேடு முதல் தீவு திடலுக்கு வரும் ஆட்டோக்கள் ஃப்ரீயாக ஒவ்வொருவரையும் அழைத்து வந்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து விஜயகாந்த் சமாதியில் அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு தினமும் சாப்பாடு கொடுக்கப் போகிறார்கள்.
அது மட்டும் இல்லாமல் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்திய விஜய் டிவி புகழ் அவருடைய கேகே நகர் ஆபீஸில் தினமும் 50 பேருக்கு சாப்பாடு கொடுக்கும் திட்டத்தை துவங்கப் போகிறார். அடுத்ததாக அருண் விஜய், அவர் சாப்பிடுகிற அதே உணவை அவருடைய தயாரிப்பு நிறுவனத்தில் உள்ளவர்க்கும் போடுவதாக கூறியிருக்கிறார்.
இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் விஜயகாந்த் செய்த ஒவ்வொரு நல்ல விஷயங்களும் தான் தற்போது சிலரின் மனதை மாற்ற வைத்திருக்கிறது. அத்துடன் கோயம்பேட்டில் ஆண்டாள் அழகர் திருமண மண்டபம் அருகில் உள்ள வளைவு சந்திப்பு சாலைக்கு கேப்டன் விஜயகாந்த் சதுக்கம் என பெயரிடப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதை எல்லாம் பார்க்கும்பொழுது எம்ஜிஆரை விட ஒரு படி மேலேயே விஜயகாந்த் சொக்கத்தங்கம் என்று நிரூபித்துக் காட்டி விட்டார்.
Also read: புத்தாண்டு மயக்கம் தெளிந்த விஷால்.. விஜயகாந்த் சமாதியில் கண்ணீரோடு போட்ட பெர்ஃபாமன்ஸ்