வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

நடிப்பே வராத விஜய்யை நடிக்க வைத்து தூக்கி விட்ட 3 இயக்குனர்கள்.. தளபதிக்கு திருப்புமுனை படங்கள்

Vijay Movie Directors: சினிமாவில் விஜய் என்ட்ரி ஆனபோது ‘இதெல்லாம் ஒரு மூஞ்சியா’ என ஏகப்பட்ட உருவ கேலிகள் செய்யப்பட்டாலும், இவருடைய நடிப்பு அப்படியே அப்பட்டமாக திரையில் தெரியும். ஒரே மாதிரியான நடிப்பை வெளிக்காட்டிக் கொண்டிருந்தார். பெருசா இவருடைய நடிப்பில் வித்தியாசம் இருக்காது.

அப்படி இருந்தும் அவருடைய தந்தை எஸ்ஏ சந்திரசேகர் விஜய்யை எப்படியாவது நடிகராக்கி விட வேண்டும் என சொந்த காசை போட்டு படங்களை தயாரித்து இயக்கிக் கொண்டிருந்தார். அப்படியும் விஜய்க்கு நடிப்பே வரல. எஸ்ஏ சந்திரசேகரை தவிர பிற இயக்குனர்களின் கைகளுக்கு விஜய் சென்றார்.

அதிலும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய இந்த மூன்று இயக்குனர்கள் தான் நடிப்பே வராத விஜய்யை நடிக்க வைத்து அவருடைய சினிமா கேரியருக்கு திருப்புமுனையாக இருந்தனர். இயக்குனர் ஏஆர் முருகதாஸ், அட்லி, லோகேஷ் கனகராஜ் இவர்கள் மூவரும் தான் விஜய்யை வேற மாதிரி சேஞ்ச் பண்ணி நடிக்க வைத்தார்கள்.

Also Read: விஜய்க்கு வராத சங்கம் ஏன் த்ரிஷாவுக்கு மட்டும் வராங்க.? மன்சூருக்காக குரல் கொடுத்த சீமான்

விஜய்யின் நடிப்பை கொண்டு வந்த 3 இயக்குனர்கள்

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான கத்தி, துப்பாக்கி படத்தில் தளபதியின் வித்தியாசமான நடிப்பை பார்க்க முடிந்தது. அது மட்டுமல்ல அட்லியின் தெறி மற்றும் லோகேஷ் கனகராஜின் லியோ, மாஸ்டர் போன்ற படங்களில் காமெடி, சென்டிமென்ட், ஆக்சன், டான்ஸ், ரொமான்ஸ் என எல்லாவற்றிலும் தளபதி விஜய் பின்னி பெடலெடுத்தார்.

இந்த படங்களுக்குப் பிறகுதான் விஜய்யின் மார்க்கெட்டும் டாப் கீரில் எகிறியது. அதுமட்டுமல்ல இந்த மூன்று இயக்குனர்கள் விஜய்யின் நடிப்பில் மாற்றத்தை ஏற்படுத்தியதால் தான் இப்போது ரசிகர்களுக்கு பிடித்தமான படங்களை தேர்வு செய்து, அவர்கள் விரும்பும் படி நடிக்க துவங்கி விட்டார். இவர்கள் மூவரும் இயக்கிய படங்கள் தான் அவருடைய சினிமா கேரியருக்கு திருப்பு முனையாக அமைந்தது.

Also Read: தளபதி 68 படத்தின் கதை இதுதான்.. சிம்புவுக்கு ஒர்க் அவுட் ஆச்சு, விஜய்க்கு செட் ஆகுமா?

Trending News