வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

ஹாலிவுட் லெவலுக்கு இந்திய சினிமாவை தூக்கிப் பிடிக்கும் 3 பேர்.. வாய்ப்பிற்காக காத்து கிடக்கும் நடிகர்கள்

தற்போது பல தொழில் நுட்பத்துடன் சினிமா அடுத்த கட்டத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. இதில் முக்கிய பங்களிப்பு இயக்குனர்களுக்கும் உண்டு. ஏனென்றால் படத்திற்கு ஆணிவேர் கதைதான். தங்களது இயக்கங்கள் மூலம் படத்தை வெற்றியடையச் செய்கிறார்கள். மேலும் நல்ல படங்களை கொடுத்து வெற்றிப் பெறும் இயக்குனர்கள் இடையே தனிச் சிறப்பைப் பெற்ற 3 இயக்குனர்கள் உள்ளனர்.

தற்போது இவர்கள் படம் வெளியாகிறது என்றாலே ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைக்கிறது. காரணம் இவர்களது மூலதனமே பிரம்மாண்டம் தான். எப்போதுமே பிரமாண்டத்திற்கு பஞ்சமில்லாத இந்த மூவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவரில்லை என்பதை ஒவ்வொரு முறையும் நிரூபித்து வருகின்றனர்.

இவர்களுக்கு பெரிதாக அறிமுகம் எதுவும் தேவை இல்லை. பிரம்மாண்டம் என்று சொன்னாலே போதும். அது ஷங்கர், ராஜமௌலி மற்றும் பிரஷாந்த் நீல் தான். சமீபத்தில் பிரஷாந்த் நீலின் கேஜிஎப் 2 படம் வெளியாகி திரையரங்குகளில் சக்கைபோடு போட்டு வருகிறது. இந்நிலையில் பாகுபலி பிரபலம் பிரபாஸ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் சலார் படம் உருவாகியுள்ளது.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை பிரம்மாண்டம் என்றாலே அது ஷங்கர் தான். இவர் இயக்கத்தில் வெளியான எந்திரன் படம் உலகம் முழுவதும் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இந்நிலையில் ஷங்கர் ராம்சரனின் வைத்து RC15 படத்தை இயக்கி வருகிறார். இப்படம் தெலுங்கில் உருவாக உள்ளது.

பாகுபலி என்ற பிரமாண்ட படத்தின் மூலம் பிரபலமானவர் ராஜமௌலி. இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் RRR. இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவகன், அலியாபட் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வந்தது. மேலும் வசூலையும் வாரி குவித்தது.

இந்நிலையில் ஷங்கர், ராஜமௌலி, பிரஷாந்த் நீல் போன்ற பிரம்மாண்ட இயக்குனர்களின் படங்கள் நிச்சயம் வெற்றி பெறும் என்ற எண்ணம் ரசிகர்கள் மத்தியில் வந்துள்ளது. இவர்களது படங்களில் நடிக்கும் நடிகர்களின் மார்க்கெட்டும் உயர்ந்துள்ளது. இதனால் பல நடிகர்களும் அவர்களது படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர்.

Trending News