Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

உச்சத்தில் இருக்கும் சுக்ரன்.. ஒரு மாதத்தில் விஜய் சேதுபதியை எங்கேயோ கொண்டு சென்ற 3 படங்கள்

விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்ததை காட்டிலும் வில்லனாக நடிக்கும் படங்கள் வசூல் வேட்டையாடி வருகிறது. ரஜினியின் பேட்ட, விஜய்யின் மாஸ்டர், சமீபத்தில் கமலஹாசனின் விக்ரம் ஆகிய படங்களில் விஜய் சேதுபதி வில்லனாக மிரட்டி இருந்தார். உச்ச நடிகர்களாக உள்ளவர்கள் […]

விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்ததை காட்டிலும் வில்லனாக நடிக்கும் படங்கள் வசூல் வேட்டையாடி வருகிறது. ரஜினியின் பேட்ட, விஜய்யின் மாஸ்டர், சமீபத்தில் கமலஹாசனின் விக்ரம் ஆகிய படங்களில் விஜய் சேதுபதி வில்லனாக மிரட்டி இருந்தார். உச்ச நடிகர்களாக உள்ளவர்கள் இதுபோன்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க தயங்குவார்கள்.

ஆனால் துணிச்சலாக விஜய் சேதுபதி எடுத்த முடிவு தற்போது அவருக்கு மிகப்பெரிய உயரத்தை அடைய செய்துள்ளது. இந்நிலையில் தற்போது விஜய்சேதுபதி வில்லனாக மூன்று படங்களில் நடிக்க உள்ளார். அதில் அவரது சம்பளத்தை கேட்டு கோலிவுட்டே வாயை பிளந்து உள்ளது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் வில்லனாக நடிக்க முதலில் விஜய் சேதுபதிதான் தேர்வானார். ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இப்படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போனது. தற்போது புஷ்பா 2 படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளார்.

இதில் பகத் பாசிலுக்கு உயர் அதிகாரியாக விஜய்சேதுபதி நடிக்கவிருக்கிறார். மேலும் இப்படத்திற்காக விஜய் சேதுபதிக்கு 25 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக பாலிவுட்டில் பல படங்களை கைவசம் வைத்துள்ளார் விஜய்சேதுபதி. கத்ரீனா கைஃப் உடன் மேரி கிறிஸ்மஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது அட்லி இயக்கும் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். ஏற்கனவே இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் நடிப்பதற்காக விஜய்சேதுபதிக்கு 30 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து தெலுங்கில் இயக்குனர் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் நடிக்க அவருக்கு 25 கோடி சம்பளமாம். இந்த மூன்று படங்களும் ஒரே மாதத்தில் அவருக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுத்துள்ளது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.