2025 தனுஷ்கான வருஷம்.. மூன்று படங்களின் ரிலீஸை லாக் செய்த அசுரன்

Dhanush: தனுஷுக்கு 2025 தொடக்கம் மோசமானதாக அமைந்திருக்கலாம். ஆனால் பிற்பகுதி ஒரு அமோக வெற்றியை கொடுக்க உள்ளது. தனது சகோதரி மகனை வைத்து தனுஷ் இயக்கிய படம் தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்.

இந்த படம் தோல்வியை தழுவிய நிலையில் தனுஷ் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அவரே இயக்கி நடிக்கும் படம் தான் இட்லி கடை. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருக்கிறார்.

கிராமம் சார்ந்த ஒரு உணர்ச்சிபூர்வமான கதையாக உருவாகி இருக்கும் இட்லி கடை அக்டோபர் ஒன்று வெளியாக இருக்கிறது. அதற்கு முன்னதாக தனுஷின் குபேரன் படம் ஜூன் 20 வெளியாக உள்ளது.

இந்த வருடம் தனுசுக்கு வெளியாகும் மூன்று படங்கள்

குபேரன் படம் அரசியல் சார்ந்த கதைகளத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்ததாக ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வருகிறது தேரே இஷ்க் மெயின் படம். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சனூன் நடிக்கிறார்.

இப்படம் இந்த வருட இறுதியில் நவம்பர் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படம் ரொமான்டிக் கலந்த காதல் படமாக உருவாகி வருகிறது. இவ்வாறு தனுஷ் இந்த மூன்று படங்களிலும் வெவ்வேறு ஜானல் நடிக்கிறார்.

இந்த படங்கள் இதே ஆண்டு வெளியாவதால் எல்லாமே தனுஷுக்கு வெற்றி வாகையை கொடுக்கும் என அவரது ரசிகர்கள் நம்புகிறார்கள். தனுஷும் அதற்கான கடின உழைப்பை போட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment