திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

லோகேஷ் இதுவரை வசூலில் வேட்டையாடிய 3 படங்கள்.. அதிக எதிர்பார்ப்பைக் கிளப்பும் தளபதி 67 ப்ரீசேல் பிசினஸ்

விஜய்யின் வாரிசு படத்தின் வெற்றியை அடுத்து ஒரு மிகப்பெரிய வெற்றியை கொடுப்பதற்காக வெற்றி இயக்குனராக இருந்து வரும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 67-வது படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளிவந்த மாஸ்டர்    படத்தை தொடர்ந்து இவர்கள் மறுபடியும் 67 இல் இணைவது ரசிகர்களிடையே ஆவலை ஏற்படுத்தி வருகின்றது.

லோகேஷ் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு கார்த்திக் நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படம் வசூல் ரீதியாகவும் கல்லா கட்டியது. இந்த படத்தில் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கு மேல் வசூல் ஆகியது.

Also read: லோகேஷ் கைவிட்ட வாரிசு நடிகர்.. டர்னிங் பாயிண்ட் என நினைத்து மொக்கை வாங்கிய ஹீரோ

இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த படம் மாஸ்டர். இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தைப் பிடித்த முதல் இந்திய திரைப்படம். இந்தப் படம் சுமார் 250 கோடி க்கு மேல் வசூலில் சாதனை பிடித்தது.

இதைத்தொடர்ந்து அடுத்தபடியாக லோகேஷ் கமல்ஹாசன் அவர்களை வைத்து வெளிவந்த படம் விக்ரம். இந்தப் படம் எதிர்பார்த்ததை விட வெற்றிகரமாகவும் வசூலிலும் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்தப் படம் 450 கோடிக்கு மேல் வசூல் ஆகியது.

Also read: தளபதி 67ல் உறுதியான 6 கேங்ஸ்டர் நட்சத்திரங்கள்.. ஆக்சன் கிங் அர்ஜூனுடன் இணையும் வில்லன்

இப்படி தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகின்ற லோகேஷ் இவரின் அடுத்த படமான விஜய் 67லினும் பெரிய வெற்றி படத்தை கொடுப்பது மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் இதுவரை பெற்ற எல்லா படங்களின் வசூலை முறியடிக்கும் வகையில் இந்தப் படத்தை வசூலில் முதலிடம் கொண்டு போக வேண்டும் என்று பெரிய அளவில் திட்டம் தீட்டி கொண்டு வருகிறார்.

இதுவரை இவர் வசூலில் வேட்டையாடிய 3 படங்களை விட இந்தப் படத்திற்கான வசூல் சுமார் 600 கோடி இருக்க வேண்டும் என்று முழு முயற்சியுடன் இந்த படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இதனால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்புகளும் அதிகமாகி கொண்டே வருகிறது.

Also read: லோகேஷ் கைவிட்ட வாரிசு நடிகர்.. டர்னிங் பாயிண்ட் என நினைத்து மொக்கை வாங்கிய ஹீரோ

Trending News