Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

கவினை பார்த்து சம்பளத்தை உயர்த்திய தக் லைஃப் நடிகர்‌‌.‌. தலையில் துண்டை போடும் தயாரிப்பாளர்கள்

கவினை பார்த்து சம்பளத்தை உயர்த்திய தக் லைஃப் நடிகர்‌‌.‌. தலையில் துண்டை போடும் தயாரிப்பாளர்கள்

Kavin : இப்போது படத்தின் பட்ஜெட்டை காட்டிலும் நடிகர்களின் சம்பளம் தான் அதிகமாக இருக்கிறது. இதனாலையே தயாரிப்பாளர்கள் மிகப்பெரிய சிக்கலை சந்தித்து வருகிறார்கள். படம் வெற்றியோ தோல்வியோ அடுத்த படத்தில் சம்பள உயர்வு தான் முதலில் வந்திருக்கிறது. அவ்வாறு […]

Kavin : இப்போது படத்தின் பட்ஜெட்டை காட்டிலும் நடிகர்களின் சம்பளம் தான் அதிகமாக இருக்கிறது. இதனாலையே தயாரிப்பாளர்கள் மிகப்பெரிய சிக்கலை சந்தித்து வருகிறார்கள். படம் வெற்றியோ தோல்வியோ அடுத்த படத்தில் சம்பள உயர்வு தான் முதலில் வந்திருக்கிறது.

அவ்வாறு கவின் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்த நிலையில் ப்ளடி பக்கர் படத்தின் மூலம் தோல்வியை சந்தித்தார். ஆனாலும் அதன் பிறகு தனது சம்பளத்தை 5 கோடியாக நிர்ணயித்தார். இப்போது அவர் நடித்திருக்கும் படம் தான் கிஸ்.

இந்த படத்தை வாங்க விநியோகஸ்தர்களே முன் வரவில்லை என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் இப்போது கவினை பார்த்து சம்பளத்தை உயர்த்தி இருக்கிறாராம் நடிகர் அசோக் செல்வன்.

கவினை போல் சம்பளத்தை உயர்த்திய தக் லைஃப் நடிகர்

இவர் நடித்த போர் தொழில் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதுவரை 50 லட்சம் சம்பளம் பெற்று வந்த இவர் கமலின் தக் லைஃப் படத்தில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெற்றார். இப்போது தனது சம்பளத்தை டபுள் மடங்காக்கி இரண்டு கோடி கேட்டு வருகிறாராம்.

தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக அசோக் செல்வன் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரம் அவருக்கு ஏற்றார் போல் உள்ளது. இந்த சூழலில் அசோக் செல்வன் கேட்கும் பணத்தை கொட்டி கொடுக்க தயாரிப்பாளர்கள் முன் வந்திருக்கின்றனர்.

ஆனால் நடிகர்களின் சம்பள வாங்கும் அளவாவது வசூல் செய்யுமா என்பது படம் வெளியானால் தான் தெரியும். ஆனால் அசோக் செல்வன் கதாநாயகனாக கடைசியில் நடித்த போர்தொழில் படம் கிட்டத்தட்ட 50 கோடியை தாண்டி வசூல் செய்திருந்தது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.