திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

யார் நம்பர் ஒன்.. பரபரப்பான வசூல் விவரத்தை வெளியிட்ட சென்னை தியேட்டர்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் துணிவு மற்றும் விஜயின் வாரிசு போன்ற இரண்டு படங்கள் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த இரண்டு ஹீரோக்களும் 8 வருடங்களுக்குப் பிறகு திரையில் மோதிக் கொள்வதால் யாருடைய படத்திற்கு அதிக வசூல் என்பதை தெரிந்து கொள்ளவும் சோசியல் மீடியாவில் அவர்களுடைய ரசிகர்கள் வெறிகொண்டு காத்திருக்கின்றனர்.

ஏற்கனவே வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு, ‘விஜய் தான் நம்பர் ஒன். அவருக்குத்தான் அதிக ஸ்கிரீனிங் கொடுக்க வேண்டும்’ என பரபரப்பு ஏற்படுத்தினார். இதனால் தற்போது யார் வசூலில் நம்பர் ஒன் என்ற சர்ச்சையை மேலும் அதிகப்படுத்தும் விதத்தில் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கு வசூல் விவரத்தை வெளியிட்டுள்ளது.

Also Read: 100 கோடி வசூலில் டாப் 7 ஹீரோக்களுக்கு தண்ணி காட்டிய ஒரே ஹீரோ.. பாக்ஸ் ஆபீஸ் கிங் என மீண்டும் நிரூபித்த வாரிசு

இந்த வசூல் விபரத்தை வைத்தே தமிழகத்தில் நம்பர் ஒன் யார் என்பது தெரிந்து விட்டது. தமிழ்நாட்டில் அஜித் விஜய் இரண்டு படங்களுக்கும் முக்கியமான திரையரங்கம் என்று கருதப்படுவது சென்னை ரோகிணி தியேட்டர். இந்த திரையரங்கில் இந்த இரு நடிகர்களுக்கும் உள்ள வசூலை சுலபமாக கணக்கிட்டு சொல்லுவார்கள் இதை வைத்து ரசிகர்கள் ஆரவாரம் செய்வார்கள்.

படம் ரிலீஸ் ஆன ஒரு வார இடைவெளியில் எப்பொழுதும் சொல்லும் ரோகினி தியேட்டர் கருத்துக்கணிப்பு இப்பொழுது இன்று வெளியாகி இருக்கிறது. ரோகிணி தியேட்டர் வசூலை பொருத்தவரையில் அஜித் நடித்த துணிவு படம் நம்பர் 1 ஆகவும், விஜய் நடித்த வாரிசு நம்பர் 2 ஆகவும் இருக்கிறது என அறிவித்திருக்கிறார்கள்.

Also Read: கொழுந்துவிட்டு எரியும் வாரிசு, துணிவு விவகாரம்.. பகிரங்க மிரட்டல் விடுத்த ரெட் ஜெயிண்ட்

இன்னும் விடுமுறை நாட்கள் மீதமுள்ள நிலையில் இது இன்னும் சூடு பிடிக்கும் என்று பேசப்படுகிறது. அஜித் ரசிகர்கள் இதனை ஆரவாரம் செய்து கொண்டாடி வருகின்றனர் தற்போது போஸ்டர்கள் அடித்து ஒட்டி கெத்து காட்டிக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அதை போல் வாரிசு, குடும்ப செண்டிமெண்ட் படம் என்பதால் ஃபேமிலி ஆடியன்ஸ் சப்போர்ட் அதிகம் இருக்கும். ஆகையால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறையில் இருப்பவர்கள் வாரிசு படத்தை விரும்பி பார்க்கவும் வாய்ப்பு இருக்கிறது.

ஏற்கனவே மூன்றே நாளில் 100 கோடியை தட்டி தூக்கிய வாரிசு, இந்த விடுமுறையை முன்னிட்டு இன்னும் 100 கோடியை வசூல் செய்யவும் திட்டமிட்டுள்ளது. எனவே இறுதியாக இந்த இரண்டு படங்களின் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் வெளியிடும் வசூல் விவரத்தை வைத்து தான் யார் நம்பர் ஒன் என்பது முழுமையாக தெரியும்.

Also Read: இனி ஒரு உயிர் போகக்கூடாது, ஆட்டமெல்லாம் வாரிசு துணிவோடு முடிஞ்சு.. அஜித், விஜய் எடுத்த அதிரடி முடிவு

Trending News