செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

வெளிநாட்டில் துணிவு படத்திற்கு தடை ஏன் தெரியுமா.? விஜய்க்கு இருக்கும் மாஸ் தான் காரணமா?

பொங்கல் தினத்தன்று ஆவலுடன் ரசிகர்கள்  எதிர்பார்த்து கொண்டு இருக்கும் படம் துணிவு மற்றும் வாரிசு. அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு என இரு துருவங்களாக மோதிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது துணிவு படத்திற்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் வெளிவந்த துணிவு படத்தின் ட்ரெய்லரில்  அஜித் நெகட்டிவ் ரோலில் பட்டையைக்  கிளப்புவார் என்று ரசிகர்கள் ஆரவாரத்துடன் எதிர்பார்த்துக் காத்து கிடக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது துணிவு படத்தை வெளியிடுவதற்கு சில சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது. அதாவது சவுதி அரேபியாவில் இந்தப் படத்தை பார்த்த சென்சார் குழு இப்படத்திற்கு தடை விதித்துள்ளது. ஏனென்றால் இந்த படத்தில் வரும் காட்சிகளில் பெண்கள் மற்றும் திருநங்கைகளை மையப்படுத்தியும், அளவுக்கு அதிகமாக சண்டைக் காட்சிகளும் இருப்பதால் இத்திரைப்படத்தில் அவர்களுக்கு அதிருப்தி அளித்துள்ளது.

Also Read: போட்டி போட்டு மில்லியன் கணக்கில் ரசிகர்களை கூட்டும் வாரிசு, துணிவு.. கத இல்லனா வெளியில தலை காட்ட முடியாது

அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் கன்சாட், க்ரைம்சீன்கள் மற்றும் அதிகமான கெட்ட வார்த்தைகளை பயன்படுத்திருக்கிறார். இதில் பேசிய சில வசனங்களுக்கு பீப் சவுண்ட் போட்டு இருக்கிறது.இதன் காரணமாக தான் வெளிநாடுகளில் துணிவு படத்தை வெளியிடுவதற்கு தடைபட்டு வருகிறது. ஆனால் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கலாகிய அஜித் ரசிகர்கள் துணிபு படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

பல இடங்களில் அஜித்தின் ரசிகர்கள் முன்னதாகவே டிக்கெட் புக் செய்து உள்ளார்கள். இந்த சூழலில் படம் வெளியிடுவதற்கு தடை ஏற்பட்டால் ரசிகர் நிலைமை என்னவென்று தெரியவில்லை. இந்த முடிவால் மற்ற நாடுகளிலும் துணிவு படத்தை வெளியிடுவதற்கு தடையாக அமைய வாய்ப்புள்ளது.

Also Read: அஜித்தின் சென்டிமென்ட்டுக்கு ஆப்பு வைத்த வாரிசு.. துணிவுக்கு ஷாக் கொடுத்த விஜய்

இதற்கு இதுதான் காரணமா அல்லது வெளிநாடுகளில் எப்போதுமே விஜய் படத்திற்கு ஒரு பெரிய மவுசு இருக்கும்.அந்த வகையில் துணிவு படத்திற்கு ஒரு முட்டுக்கட்டை போடுகிறார்களா என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. இப்படத்தில் தற்போது வெளிவந்துள்ள இந்த விவகாரம் துணிவு படக் குழுவினருக்கும், அவரின் ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றமாக அமையும் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

எது எப்படியோ தமிழ்நாட்டில் துணிவு, வாரிசு படத்தின் முதல் காட்சி பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்தப் பொங்கல் ரசிகர்கள் கண்டிப்பாக திருவிழா தான் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. படம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் செய்யுமா? செய்யாதா? என்பது கதைக்கருவை பொறுத்து மட்டுமே இருக்கும் என்பது தான் நிதர்சனமான உண்மை.

Also Read: நீயா நானா போட்டியில் துணிவுக்கு விட்டுக் கொடுத்த வாரிசு விஜய்.. உறுதியான ரிலீஸ் தேதி

Trending News