செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

துணிவு அயோக்கியர்களில் ஆட்டம்.. எதிர்பார்ப்பை எகிற விட்ட ஹெச் வினோத்

வரும் பொங்கலுக்கு ரிலீசாகும் அஜித்தின் துணிவு பட ப்ரொமோஷனை பட குழு பரபரப்புடன் செய்து கொண்டிருக்கிறது. அதுவும் இந்தப் படத்தின் புதிய போஸ்டர் நள்ளிரவில் வெளியாகி ரசிகர்களிடம் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. இதில் அஜித் கையில் துப்பாக்கியுடன் செம மாஸ் ஆக காட்சி அளிக்கிறார்.

இந்நிலையில் படத்தின் இயக்குனர் ஹெச் வினோத்திடம் துணிவு படத்தை குறித்து பல கேள்விகளை கேட்டு இருக்கின்றனர். ஒரு கட்டத்தில் காண்டான ஹெச் வினோத் செய்தியாளர்களிடம் காரசாரமாக பதில் அளித்துள்ளார். அவரிடம் துணிவு படம் ஹீஸ்ட் படம் என சொல்கிறார்களே! அப்படி தானா எனக் கேட்டனர்.

Also Read: அக்ரீமெண்ட் போடும் முன்பே அடித்துக் கொள்ளும் கூட்டம்.. வாரிசு, துணிவு வைத்திருக்கும் ட்விஸ்ட்

இதற்கு பதில் அளித்த ஹெச் வினோத், இதே போன்று தான் முதலில் வலிமை படத்திற்கும்  வங்கிக் கொள்ளை பற்றிய திரைப்படம் என வதந்திகளைக் கிளப்பி பரவத் தொடங்கின. ஆனால் இது ஒரு மல்டி ஜானர் படம். இது ஒரு அயோக்கியர்களில் ஆட்டம் என வெளிப்படையாகப் பேசி துணிவு படத்தின் எதிர்பார்ப்பை எகிறவிட்டுள்ளார்.

மேலும் துணிவு படம் இன்னொரு மங்காத்தாவானு கேட்கிறார்கள். இப்படி இவர்களது கற்பனைக்கு எட்டுவது தான் எங்களது பெரிய பிரச்சினையாக இருக்கிறது. ஏனென்றால் ஒரு படம் வெளி வருகிறது என்றால் அந்த படம் புதுவிதமாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் ஆர்வத்துடன் பார்க்கக்கூடிய ஆடியன்ஸ்கள் தான் எங்களுக்கு தேவை.

  அச்சு அசலாக அஜித் போல இருக்கும் டூப்.. வைரலாகும் புகைப்படம்

அப்போதுதான் படத்தின் வெற்றியும் அமையும் என்ற ஹெச் வினோத், வலிமை படத்தின் நிலை துணிவுக்கு வந்து விடக்கூடாது என முன்கூட்டியே செய்தியாளர்களிடம் காட்டமாக பேசுகிறார். அத்துடன் இந்த படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறாரா? என்று கேட்டதற்கு இல்லை என பதிலளித்த வினோத், இதில் அஜித்தின் கேரக்டர் மிஸ்டரியாகவே இருக்கட்டும் என்று சமூக வலைதளங்களில் உருவாகும் கற்பனைகள் மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுகிறது.

மேலும் துணிவு படத்தின் பாடல் மற்றும் டிரைலர் மட்டுமே பார்த்துவிட்டு படத்திற்கு வருவது நல்லது என்றும் கூறியுள்ளார். இதேபோன்று மறுபுறம் வாரிசு படத்தின் பட ப்ரமோஷன் நாளுக்கு நாள் சூடு பிடிக்கிறது. இவ்வாறு 8 வருடங்களுக்குப் பிறகு திரையில் மோதிக்கொள்ளும் தல, தளபதி படங்களையும் ஒரே சமயத்தில் பார்க்க வெகு ஆண்டுகளாக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Also Read: அஜித் கொடுத்த 10 லட்சம்.. வீடுவரை சென்று அவமானப்பட்ட விஜயகாந்த்

Trending News