திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

200 கோடி வசூலுக்கு முட்டி மோதும் துணிவு.. இதுவரை செய்யாத சாதனையை செய்து காட்டிய அஜித்

அஜித்தின் துணிவு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு உலகெங்கும் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்தப் படம் வங்கிக் கொள்ளையே மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இது அனைத்து விதமான ரசிகர்களையும் ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது. இந்த படம் அஜித்திற்கு வசூலில் பெரிய சாதனையை பார்த்து வருகிறது.

மேலும் துணிவு படத்துடன் வாரிசு படமும் ரிலீஸ் ஆனதால் வசூல் ரீதியாகவும், பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனிலும் போட்டி போட்டு வருகின்றன. ஆனால் இந்த இரண்டு படங்களும் வெற்றி படமாக தான் இருக்கிறது. இதுவே இவர்களின் படங்கள் தனித்தனியாக திரைக்கு வந்திருந்தால் இன்னும் அதிக அளவில் வசூலை பெற்று இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை.

Also read: துணிவு படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் ரிப்போர்ட்.. ஆட்டநாயகன் என நிரூபித்த அஜித்

அஜித் இதுவரை செய்யாத அளவிற்கு துணிவு படத்தின் மூலம் சாதனை படைத்துள்ளார். அதாவது இப்படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 250 கோடிக்கு அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. அஜித்தின் கேரியரில் மிக முக்கியமான மைல்கள்ளாக துணிவு படம் அமைந்துள்ளது.

ஆனாலும் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தற்போது 200 கோடி தொடுவதில் அஜித்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த வசூலை பெறுவதற்காக துணிவு படம் வெளியாகி கிட்டத்தட்ட 20 நாட்களைக் கடந்தும் முட்டி மோதி வருகிறது. ஆனால் அஜித் மிக விரைவில் 200 கோடியை தொட்டு விடுவார் என அவரது ரசிகர்கள் நம்புகிறார்கள்.

Also read: ஒண்ணுமே ரெடி பண்ணாமல் கோடிக்கணக்கில் பேசிய பேரம்.. அஜித்தின் வெறுப்பை சம்பாதித்த இயக்குனர்

இந்த படத்தில் பெரிய ஹைலைட்டே அஜித்தின் மைக்கேல் டான்ஸ் ஸ்டெப்பும் இதில் வரும் அவருக்கான பிஜிஎம் இந்த படத்திற்கு பெரிய அட்ராக்டிவ் ஆக அமைந்தது. மேலும் அதிகமான திரையரங்குகளில் ரிலீஸ் ஆன காரணத்தினால் துணிவு வாரிசு படத்தை விட அதிக அளவில் வசூல் புரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இவரின் முந்தைய படங்களை விட இந்தப் படத்தில் தான் பெரிய அளவில் வசூல் புரிந்துள்ளது. இவர் நடித்த விசுவாசம் படம் பெரிய அளவில் வெற்றி பெற்று வசூல் அளவிலும் பெரிய சாதனையை கொடுத்தது. அந்தப் படத்தின் சாதனையை முறியடிக்கும் வகையில் துணிவு படம் வசூலில் சாதனை பெற்று வருகிறது.

Also read: விக்னேஷ் சிவனை கைவிடாத அஜித்.. ஏகே 62 குழப்பத்தை இன்னும் கிண்டி கிளறிய நெட்பிளிக்ஸ்

Trending News