வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

எல்லை மீறும் டிக் டாக் பிரபலம்.. ஆபாச வீடியோவால் திக்குமுக்காடிய இணையதளம்

ரசிகர்களை அதிகம் கவர்வது சினிமாதான். இதனால் கையில் இருக்கும் மொபைல் மூலம் தாமும் நடிகனாகலாம் என்ற எண்ணத்தை உருவாக்கியது டிக் டாக் செயலி. மேலும் சினிமா வாய்ப்புக்காக அலையும் பலருக்கு இந்த டிக் டாக் வீடியோக்கள் மூலம் படவாய்ப்புகளும் வந்துள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக ஜி பி முத்து கூட சொல்லலாம்.

இது ஒருபக்கம் நன்மைக்கு பயன்பட்டாலும், மறுபக்கம் மோசமான சமூக சீர்கேடு விளைவிக்கும் வகையில் போய்க்கொண்டே இருக்கிறது. புகழுக்காகவும், லைக்ஸ் பெறுவதற்காகவும் சிலர் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அதில் ஒருவர்தான் டிக் டாக் இலக்கியா. இவருடைய வீடியோக்களில் மிகவும் மோசமான கவர்ச்சி, இரட்டை வசனங்கள் என கொட்டிக் கிடக்கிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடச் செய்கின்றனர். இதனாலேயே இவரது வீடியோவுக்கு ஏகப்பட்ட லைக்ஸ் விழுகிறது.

தற்போது இவருக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. குழந்தைகள் அதிகமாக தற்போது மொபைல் போன்களை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் ஆன்லைன் கிளாஸ் உள்ளிட்ட காரணங்களால் குழந்தைகளிடத்தில் இருந்த போனை பெற்றோர்களால் தவிர்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குழந்தைகள் போனைப் பயன்படுத்தும்போது ஆபாச வீடியோக்களின் லிங்குகள், விளம்பரங்கள் என அடிக்கடி வருகிறது. எதர்ச்சையாக அதை கிளிக் செய்தால் மாணவர்களின் கவனம் வேறு திசையில் செல்ல அதிக வாய்ப்பு உள்ளது.

இதனால் டிக் டாக் இலக்கியா போன்ற நபர்களின் அத்துமீறல்கள் ஆன வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர். மேலும் இவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். இந்நிலையில் பேபி சூர்யா கூட இரு முறை கைது செய்யப்பட்டுள்ளார்.

Trending News