திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

எனக்குன்னு எங்கிருந்து வரீங்க டா! தளபதி கட்சி ஆரம்பிக்கும் இந்த நேரத்தில் சந்தி சிரிக்க வைத்த திருச்சி செந்தில்

Actor Vijay : விஜய் இப்போது சினிமாவை காட்டிலும் அரசியலில் இறங்க படு பயங்கரமாக வேலை செய்தார். அதன்படி சமீபத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை கௌரவிக்கும் விதமாக பரிசுகள் வழங்கினார். இந்நிலையில் அடுத்ததாக இரவு பாடசாலை திறந்து உள்ளார்.

இப்படி இருக்கும் நிலையில் எனக்குன்னு எங்கிருந்து வரீங்கடா என்று சொல்லும் அளவிற்கு விஜய்க்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. விஜய்யின் மக்கள் இயக்கம் நிர்வாகி திருச்சி செந்தில் கருமண்டபம் சிங்கராயர் என்ற பகுதியில் மசாஜ் சென்டர் ஒன்று நடத்தி வருகிறார். அப்போது போலீசார் அங்கு அதிரடியாக சோதனை நடத்தியுள்ளனர்.

Also Read : ரஜினி, அஜித் இணைந்து நடிக்கும் படம்.. விஜய்யை காலி செய்ய சூப்பர் ஸ்டார் போட்ட புது பிளான்

இந்த ஸ்பா சென்டர் உரிமை வாங்காமல் நடத்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் இந்த மசாஜ் சென்டரில் அந்தரங்கத் தொழில் நடத்தி இருக்கிறார் திருச்சி செந்தில். மேலும் அங்கு இருந்த இரண்டு பெண்களை மீட்டு பெண்கள் காப்பகத்தில் போலீசார் சேர்த்துள்ளனர்.

இந்த விஷயம் அறிந்த திருச்சி செந்தில் தலைமறைவு ஆகிவிட்டார். அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். சமீபகாலமாக விஜய் அரசியலின் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்காக அடிக்கடி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். சில நாட்களுக்கு முன் கூட தொடர்ந்து இரண்டு நாட்கள் பனையூருக்கு விஜய் சென்றிருந்தார்.

Also Read : ரஜினி, அஜித் இணைந்து நடிக்கும் படம்.. விஜய்யை காலி செய்ய சூப்பர் ஸ்டார் போட்ட புது பிளான்

இப்படி விஜய் பயங்கரமாக அரசியலுக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் திருச்சி மக்கள் நிர்வாகியின் மாவட்ட பொருளாளராக இருக்கும் செந்தில் இவ்வாறு அந்தரங்க தொழில் செய்தது தளபதி பெயருக்கு களங்கம் விளைவித்து உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவிலும் செந்தில் கலந்து கொண்டார்.

இப்போது விஜய் நிர்வாகி செய்த தவறினால் அஜித் ரசிகர்கள் இந்த விஷயத்தை சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிர்ந்து வருகிறார்கள். தளபதி கட்சி ஆரம்பிக்கும் சமயத்தில் அவருடைய பெயரை சந்தி சிரிக்கும் படியாக செய்துவிட்டார் திருச்சி செந்தில். விஜய் மக்கள் இயக்கத்தின் அடிப்படை உறுப்பினர்களில் இருந்து கூட திருச்சி செந்திலை நீக்க வேண்டும் என விஜய் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இதற்கு தளபதி என்ன முடிவு எடுக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also Read : ஊரே பத்திகிட்டு எரியுது உங்களுக்கு என்ன கவலை.. வாயை திறக்காத ரஜினி, கமல், விஜய், அஜித்தால் பெரும் சர்ச்சை

Trending News