பாக்ஸ் ஆபிஸை சுக்குநூறாக்கிய ‘திருச்சிற்றம்பலம்’.. முதல் நாள் கலெக்சன்

‘ கர்ணன்’ திரைப்படத்திற்கு பிறகு தனுஷிற்கு ‘ திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் தான் தியேட்டர் ரிலீஸ். அதனால் தான் தனுஷுக்கு கூட இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. பட ரிலீசிற்கு முன்பே ‘மேகம் கருக்காதா’ பாடல், ஆடியோ லாஞ்சில் தனுஷின் பேச்சு என படத்திற்கு மிகப்பெரிய ஹைப் ஏறிவிட்டது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், ராஷி கன்னா, பிரியா பவானி சங்கர், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் என பலமான கூட்டணி இந்த படத்திற்கு அமைந்து விட்டது. மித்ரன் ஜவகர் இயக்குனர் செல்வராகவனின் உதவி இயக்குனராக இருந்தார்.

Read Also : திருச்சிற்றம்பலம் தனுஷ்க்கு வெற்றியா.? தோல்வியா.? சினிமாபேட்டை ஒரு அலசல்

மித்ரன் ஏற்கனவே தனுஷை வைத்து ‘யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தம புத்திரன்’ என மூன்று வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார். அதிலும் தனுஷ்-நயன்தாரா நடித்த ‘யாரடி நீ மோகினி’ மிகப்பெரிய ஹிட் படம். எனவே மீண்டும் தனுஷ்-மித்ரன் ஜவகர் கூட்டணியில் ரசிகர்கள் ஒரு பீல் குட் திரைப்படத்தையே எதிர்பார்த்தனர், எதிர்பார்ப்புகளை இந்த கூட்டணியும் நிறைவு செய்து விட்டது.

தனுஷ்-பிரகாஷ்ராஜ்-பாரதிராஜா கூட்டணி ரசிகர்களால் பெரிதும் ஏற்கப்படுகிறது. தனுஷ்-நித்யாமேனன் காம்போ மிகப்பெரிய வெற்றி அடைந்து இருக்கிறது என்றே கூறலாம். அசுரன், கர்ணன் என மிரட்டி வந்த தனுஷ், ஹாலிவூடில் இருந்து திரும்பி வந்தாலும் மீண்டும் ‘யாரடி நீ மோகினி’ வாசுவை கண் முன் கொண்டு வந்து விட்டார்.

Read Also : திருச்சிற்றம்பலம் தனுசுக்கு வெற்றியா, தோல்வியா.? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

தனுஷ்-அனிருத் கூட்டணியில் வெளிவரும் பாடல்கள் அனைத்துமே பெரிய ஹிட் ஆகி விடும். அந்த வரிசையில் திருச்சிற்றம்பலம் படத்தின் அத்தனை பாடல்களும் மனதில் நின்றுவிட்டது. படத்தில் மற்றவர்களை விடவும் நித்யா மேனன் ஏற்று நடித்த ‘ஷோபனா’ கேரக்டர் இளைஞர்களிடையே வரவேற்பை பெற்று விட்டது.

‘திருச்சிற்றம்பலம்’ படம் பாக்ஸ் ஆபீஸ் வசூலையும் அள்ளி விட்டது. இந்த படத்தின் முதல் நாள் வசூல் எட்டிலிருந்து ஒன்பது கோடியாம். சென்னையில் மட்டும் முதல் நாள் வசூல் ஒன்றரை கோடி எட்டி விட்டது என்கிறார்கள்.

Read Also : மத்தளம் போல் அடிமேல் அடிவாங்கும் தனுஷ்.. ரகசியமாய் வெற்றிமாறனுக்கு போட்ட போன் கால்