ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 23, 2025

திருமதி செல்வம் வாசுவை நினைவிருக்கா?. பிரபல சீரியல் நடிகையுடன் ஏற்பட்ட உறவால் நாட்டை விட்டே போன டிங்கு!

Serial: திருமதி செல்வம் சீரியலில் வாசு கேரக்டரில் நடித்த டிங்குவை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறந்து விட முடியாது.

செல்வத்திற்கு அவர் பண்ணிய கெட்ட விஷயங்களால் அப்போதைய சீரியல் ரசிகர்களிடம் அதிக திட்டுக்கள் வாங்கி இருக்கிறார்.

டிங்கு குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் வைதேகி காத்திருந்தாள் படத்தில் போங்கடா நீங்களும் உங்க கல்யாணமும் என்று சொல்லும் வசனத்தால் பிரபலமானவர்.

திருமதி செல்வம் வாசுவை நினைவிருக்கா?

அதைத் தொடர்ந்து சன் டிவி சீரியல்களில் அதிகமான நெகட்டிவ் கேரக்டர்களில் நடித்தார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் ரோஷினி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும் இருந்த நிலையில் திருமதி செல்வம் சீரியலில் அர்ச்சனாவின் தங்கையாக நடித்த கவிதா மீது காதல் வயப்பட்டார்.

கவிதா இந்த சீரியலில் காவியா என்ற கேரக்டரில் தீபக்கின் மனைவியாக நடித்தார். இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார்கள்.

மனைவியை விவாகரத்து செய்துவிட்டு கவிதாவை திருமணம் செய்து கொண்ட டிங்கு அதிக நெகட்டிவிட்டியை சந்தித்தார்.

இதனால் சீரியலில் இருந்து விலகி கவிதாவுடன் வெளிநாட்டிலேயே குடியேறிவிட்டார்.

Trending News