திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

60 நாட்கள் கழித்து சரியான பாயிண்ட்டை பேசிய டைட்டில் வின்னர்.. ஜகா வாங்கிய அர்ச்சனா

Bigg Boss 7 Archana: அன்றாட வாழ்க்கை தினமும் போராகப் போகும் நிலையில், ஏதாவது பக்கத்து வீட்டில் சண்டை ஏற்பட்டு விட்டால் அதை வேடிக்கை பார்த்து நேரத்தை ஓட்டி விடுவோம். அந்த வகையில் தினமும் வீட்டில் இருந்தபடியே நீங்கள் சண்டை சச்சரவுகளை பார்த்து ரசியுங்கள் என்பதற்கு ஏற்ப பிக் பாஸ் சீசன் 7 ஒவ்வொரு நாளும் கலவரமாக போய்க் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் மாயா, பூர்ணிமா மூலமாக விஷ்ணுவை பிரைன் வாஷ் பண்ணி அர்ச்சனாவுக்கு எதிராக திருப்பி விட்டார்கள். இதனால் அர்ச்சனா மற்றும் விஷ்ணு வாக்குவாதத்தில் ஈடுபட்டு பெரிய பூகம்பமே நடந்தது. இவர்கள் சண்டை போடும்போது மற்ற போட்டியாளர்கள் வேடிக்கை பார்ப்பதும் ஜாலியாக சிரிச்சு பேசி விளையாடிக் கொண்டார்கள். அப்பொழுது அர்ச்சனாவிற்கு ஆறுதலாக விசித்ரா கூட முன்வரவில்லை.

அந்த நேரத்தில் அர்ச்சனாவிற்கு தோழமையாக அமைந்தது தான் தினேஷ், அனன்யா மற்றும் விக்ரம். அதில் அர்ச்சனாவின் கஷ்டத்தை மறைப்பதற்காக சின்ன குழந்தை போல் ஆடுவது, பேசுவது என்று விக்ரமுடன் ரொம்பவே ஜெல் ஆகிவிட்டார். அப்பொழுது விக்ரமுக்கு நீ என்னிடம் எப்படி நன்றாக பேசுகிறாய் அதே மாதிரி வெளியவும் உன்னுடைய திறமை தெரிய வேண்டும்.

Also read: அவமானத்திற்கு அஞ்சி கூனி குறுகும் பூர்ணிமா.. புலம்ப விட்டு வேடிக்கை காட்டும் பிக் பாஸ்

இந்த வாரம் நீ வெளியே போகவில்லை என்றால் அடுத்து இருக்கக்கூடிய வாரங்களில் உன்னுடைய கருத்தை தெரிவித்து விளையாட்டு ஆரம்பி என்று தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் பேசுகிறார். இப்படி இவர்கள் இருவரும் ஒற்றுமையாக இருக்கும் பட்சத்தில் திடீரென்று வாக்குவாதம் ஏற்படுகிறது. அதாவது அர்ச்சனாவின் குரலை பற்றி விக்ரம் சும்மா விளையாட்டுக்கு கிண்டல் அடித்திருக்கிறார்.

அதற்கு அர்ச்சனா நீ எப்படி என்னை அப்படி சொல்லலாம் என்று கேள்வி எழுப்ப, உடனே விக்ரம் அவர் பக்கம் இருக்கும் பாய்ண்டை சொல்லிவிட்டார். அத்துடன் இந்த வாக்குவாதத்தில் அந்த ஸ்டார் பிரச்சனைக்கும் வந்து விட்டார்கள். அப்பொழுது விக்ரம் என்னுடைய கருத்தை தெரிவிக்கும் வகையில் நான் ஸ்டாருக்காக கடைசிவரை நின்னு வாதாடினேன். அப்படி இருக்கும் பொழுது நீ சாதாரணமாக சுவற்றில் பேசுவதும் ஒன்று உங்ககிட்ட டிஸ்கஸ் பண்ணுவது ஒன்று என்று சொல்லி கிளம்பி விட்டாய்.

இப்படி தொடர்ந்து விக்ரம் சரியான முறையில் பாய்ண்ட் எடுத்து வைத்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக அர்ச்சனாவுக்கு சரியான கருத்துக்கள் இல்லாததால் எதுவும் பதில் சொல்ல முடியாத அளவிற்கு ஜகா வாங்கிவிட்டார். அந்த வகையில் 60 நாள் கழித்து இப்பொழுதுதான் வாயைத் திறந்து பேச ஆரம்பித்திருக்கிறார் டைட்டில் வின்னர் விக்ரம். இந்த கேரக்டரை இப்படியே ஃபாலோ பண்ணினால் விக்ரம் ஓரளவுக்கு ரசிகர்களின் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி விடுவார்.

Also read: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் செய்யும் அட்டூழியங்கள்.. ஆண்டவரே உங்க அரசியலை எங்க கிட்ட காட்டுறீங்களே!

Trending News