புதன்கிழமை, ஜனவரி 8, 2025

கோட் சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்ட ஏஜிஎஸ்.. ட்விஸ்ட் வைத்த தமிழக அரசு

GOAT special show: தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கிய கோட் படம் நாளை ரிலீஸ் ஆக இருக்கிறது. நாளைக்கு தமிழ்நாட்டில் விஜய் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும்.

படத்திற்கு ஏற்கனவே அதிக எதிர்பார்ப்பு உருவாகி இருக்கும் நிலையில், படத்தின் ரிலீஸ்காக தவமாய் தவம் கிடக்கிறார்கள். இந்த முறை விஜய் ரசிகர்களை தாண்டி கேப்டன் விஜயகாந்தின் ரசிகர்களும் இந்த படத்தை பார்க்க ஆவலாக இருக்கிறார்கள்.

விஜயகாந்த் வரும் ஏன் காட்சிகளுக்கு ரெஃபரன்ஸ் ஆக கேப்டன் பிரபாகரன் படத்தின் விஜயகாந்த் கெட்டப்பை பயன்படுத்தி இருக்கிறோம் என வெங்கட் பிரபு அறிவித்திருக்கிறார். இது சம்பந்தப்பட்ட சில போட்டோக்களும் நேற்றிலிருந்து சமூக வலைத்தளத்தை ஆக்கிரமித்து இருக்கிறது.

ட்விஸ்ட் வைத்த தமிழக அரசு

கோட் படத்தை பார்க்க அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன் என விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் அறிவித்திருக்கிறார். இப்படி எக்கச்சக்க எதிர்பார்ப்புகளை கூட்டி இருக்கும் கோட் படத்திற்கு சிறப்பு காட்சி இருக்குமா இருக்காதா என்பது பெரிய சந்தேகமாக இருந்தது.

அதிகாலை ரெண்டு மணி, மூன்று மணிக்கு தியேட்டரை திருவிழா கொண்டாட்டமாக மாற்றியவர்கள் தளபதியின் ரசிகர்கள். அப்படி இருக்கும்போது சிறப்புக் காட்சி இல்லை என்றால் என்ன செய்வது என்பது அவர்களுடைய பெரிய வருத்தமாக இருந்தது.

இது குறித்து தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. தமிழக அரசு சிறப்பு காட்சிக்கு ஒப்புதல் அளித்தாலும் அதிலும் ட்விஸ்ட் வைத்திருக்கிறார்கள்.

நாளை 9:00 மணிக்கு தமிழகம் எங்கும் கோட் படத்தின் சிறப்பு காட்சி ரிலீஸ் ஆகும். நாளை ஒரு நாள் மட்டும் தான் இந்த சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கி இருக்கிறது தமிழக அரசு.

எதிர்பார்ப்பை கிளப்பிய கோட்

Trending News