போன் தொலைஞ்சா, அக்கவுண்ட்ல காசு காணாம போனா இனி போலீசுக்கு போக வேண்டாம்.. இந்த நம்பருக்கு ஒரு கால் போதும்

Cybercrime: சைபர் கிரைம் தற்போது இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலக அளவில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பணப்பரிவர்த்தனை எல்லாம் டிஜிட்டல் மயமானதிலிருந்து அக்கவுண்டில் இருந்து பணம் எப்படி போகிறது என தெரியாமல் நிறைய பேர் சொந்த காசை இழந்து வருகிறார்கள்.

சமீபத்தில் ஒருவர் ஆன்லைனில் ஆர்டர் செய்துவிட்டு அதற்கான விருப்ப படிவங்களை பூர்த்தி செய்து இருக்கிறார்.

கொஞ்ச நேரத்தில் அவர் அக்கவுண்டில் இருந்த 60,000 அபேஸ் ஆகி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் பேங்கில் இருந்து போன் பண்ணுகிறேன், வேலைவாய்ப்பு கொடுக்கிறோம், ஏடிஎம் லாக் ஆகிவிடும் என எக்கச்சக்க போன் கால்களில் பணத்தை சுருட்ட பல திட்டங்களை போட்டு இருக்கிறது நாச கும்பல்.

பணம் இழந்த பிறகு அதை மீண்டும் மீட்டெடுப்பது என்பது பெரிய விஷயம். போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து, அது சைபர் க்ரைம் வழக்காக மாற்றி ஆளை கண்டுபிடிப்பதற்குள் பறிபோன பணத்தை விட அதிகமாகவே செலவாகி விடுகிறது.

தற்போது இந்த பிரச்சனைக்கு தமிழக காவல்துறை ஒரு புதிய வழியை சொல்லி இருக்கிறது. இது போன்ற சைபர் கிரைம் நடந்தால் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து புகார் கொடுக்க வேண்டிய அவசியம் எல்லாம் இல்லை. 1930 நம்பர் இருக்கு போன் பண்ணி என்ன நடந்தது என்று சொன்னால் போதும்.

போன் தொலைந்து போனால் அந்த போனின் ஐபிஎம் நம்பரை கண்டுபிடித்து உடனே லாக் செய்து விடுகிறார்கள். அதேபோன்று திடீரென வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படுகிறது என்றால் இந்த நம்பருக்கு புகார் கொடுத்தால் அந்த வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாத அளவிற்கு லாக் செய்து விடுகிறார்கள். பணத்தை இழந்து பரிதவிபோருக்கு இது ஒரு பேருதவியாக இருக்கும்.

Trending News

- Advertisement -spot_img