ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

குளிக்க குற்றால தண்ணி வேண்டாம், மினரல் வாட்டர் தான் வேணும்.. அர்ஜுன் பட நடிகையின் அட்டூழியம்

Arjun Film Actress: நடிகை ஒருவர், படத்தில் இடம்பெற்ற குளியல் காட்சியில் நடிக்க மினரல் வாட்டர் கேட்ட சம்பத்தை அந்த படத்தின் இயக்குனர் சமீபத்திய பேட்டியில் போட்டுடைத்தார். பாலிவுட் நடிகைகள் பிரியங்கா சோப்ரா மற்றும் பரினீதி சோப்ரா இவர்களின் உறவினர் தான் அந்த நடிகை.

மீரா சோப்ரா தமிழில் நிலா என்ற பெயரில் திரை உலகிற்கு அறிமுகமானார். எஸ்ஜே சூர்யா இயக்கி நடித்த அன்பே ஆருயிரே என்ற படத்தில் கதாநாயகியாக நடிகை நிலா அறிமுகமானார். முதல் படத்திலேயே டீசண்டான வரவேற்பை பெற்றார். இவர் சில வருடத்திலேயே பீல்ட் அவுட் ஆவதற்கு காரணம் திமிராக நடந்து கொண்டது.

அன்பே ஆருயிரே படத்தின் தொடர்ச்சியாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் உடன் மருதமலை, பிரசாந்த் உடன் ஜாம்பவான் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். அந்த சமயத்தில் தான் ஜாம்பவான் படப்பிடிப்பின் போது நடிகை நிலா ஓவராக அட்டகாசம் செய்திருக்கிறார்.

இந்த படத்தில் ஒரு காட்சியில் நிலா தோழிகளுடன் குளிப்பது போல் ஒரு சீன் இருந்திருக்குது. குற்றாலத்தில் அந்த காட்சியை எடுக்க படத்தின் இயக்குனர் ஏஎம் நந்தகுமார் முடிவெடுத்து எல்லா ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார். படப்பிடிப்பு தளத்திற்கு வந்த நிலா குற்றால தண்ணீரில் எல்லாம் குளிக்க முடியாது.

மினரல் வாட்டரை நிரப்புங்கள் என்று சொல்லியிருக்கிறார். படக்குழு நிலாவை சமாதானப்படுத்த எவ்வளவோ பேசி இருக்கிறார்கள். ஆனால் அவர் எதற்கும் மசியல. மூலிகை நிறைந்த குற்றால தண்ணி தேவையில்லை, மினரல் வாட்டர் தான் வேண்டும் என்று அடம் பிடித்து இருக்கிறார்.

அந்தக் காட்சியில் நடிக்க வேண்டும் என்றால் மினரல் வாட்டரை நிரப்புங்கள் என்று கெத்து காட்டினார். அதன் பிறகு பல பிரச்சினைகள் வந்து சமரசம் பேசி, ஒரு வழியா அந்தக் காட்சியை வெளிநாட்டில் படமாக்கியதாக சமீபத்திய பேட்டியில் அந்தப் படத்தின் இயக்குனர் ஏஎம் நந்தகுமார் தெரிவித்தார்.

Trending News