Memes: சோசியல் மீடியாவின் புழக்கம் இப்போது அதிகமாகிவிட்டது. இன்றைய தலைமுறை ஒரு நாளில் முக்கால்வாசி நேரத்தை அதில்தான் கழிக்கின்றனர்.
அதேபோல் twitter instagram தளங்களில் பயங்கர ஆக்டிவாக இருக்கின்றனர். இதில் தினம் தினம் நாட்டில் நடக்கும் சம்பவங்களை நெட்டிசன்கள் கலாய்ப்பதுண்டு.
அப்படித்தான் தற்போது ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற விஷயம் வைரலாகி வருகிறது. இதில் பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை சொல்லி வருகின்றனர்.
அதை நெட்டிசன்கள் இப்போதைய பிரச்சனையோடு சேர்த்து கிண்டல் அடித்து வருகின்றனர். அதாவது தமிழகமே புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
அதை மீம்ஸ் கிரியேட்டர்கள் இதற்கெல்லாம் ஒரே தீர்வு ஒரே நாடு ஒரே புயல் தான் என பங்கம் செய்து வருகின்றனர். அதேபோல் எங்கு திரும்பினாலும் ஆறு ஏரி குளங்கள் நிறைந்து இருக்கிறது.
இதை குசும்புக்கார இணையவாசிகள் கர்நாடகாவுக்கு போன் பண்ணி தண்ணி எதுவும் வேணுமானு கேளு என நக்கல் அடிக்கின்றனர். இப்படியாக இணையத்தை கலக்கும் சில ஜாலி மீம்ஸ் இதோ உங்களுக்காக.