Memes: பொங்கல் முடிந்து பள்ளி கல்லூரிகள் திறக்கப் போகிறது. அதே போல் பொங்கல் விடுமுறையோடு எக்ஸ்ட்ரா லீவு போட்டு ஊருக்கு சென்றவர்களும் நாளையிலிருந்து வேலைக்கு போக வேண்டும்.
இதனால் வெளியூர்களுக்கு சென்ற சென்னைவாசிகள் அனைவரும் மீண்டும் ஊர் திரும்புகின்றனர். இதனால் பயங்கர போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
ஆனால் அதையெல்லாம் தாண்டி எப்படியோ அடித்து பிடித்து நேற்றிலிருந்து மக்கள் ஊர் திரும்ப தொடங்கி விட்டனர். இது ஒரு பக்கம் இருக்க மாணவர்கள் பெரும் கவலையில் இருக்கின்றனர்.
ஒன்பது நாள் ஜாலியாக ஆட்டம் போட்டாச்சு. இனிமை தேர்வுகள் அடுத்தடுத்து ஆரம்பித்து விடும். அதற்காக படிக்க வேண்டும் என்ற கவலை இப்போதே அவர்களுக்கு வந்துவிட்டது.
இன்னும் சில வாண்டுகள் வயிறு வலிக்குது தலைவலிக்குதுன்னு சொல்லி நாளைக்கும் லீவு போடலாமா என விஷமமாக யோசிக்கும் சம்பவங்களும் சில வீடுகளில் நடக்கும்.
அதிலும் நாளை காலை பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது பெற்றோர்களுக்கு பெரும் பாடாக இருக்கும்.
இவர்கள் தான் இப்படி என்றால் வேலைக்கு போகும் வளர்ந்த குழந்தைகள் கூட அதே மனநிலையில் தான் இருப்பார்கள். ஏனென்றால் அடுத்து அவர்களுக்கு லீவே இருக்காது.
அதனால் வந்த கவலை தான். இப்படி சோசியல் மீடியாவை தற்போது கலக்கிக் கொண்டிருக்கும் சில நகைச்சுவை மீம்ஸ் தொகுப்பு இதோ.