சனிக்கிழமை, மார்ச் 1, 2025

ஹிந்தி தெரியலனா பரவால்ல.. எது ஹிந்தினே தெரியலன்னா எப்படிடா, ட்ரெண்டிங் மீம்ஸ்

Memes: தற்போது பல பிரச்சனைகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஹிந்தி எதிர்ப்பில் தொடங்கி சீமான் வரை அனைத்தும் வைரல் செய்திகள் தான்.

இதில் ஹிந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்ற பெயரில் கோலம் போடுவதும் போர்டில் இருக்கும் ஹிந்தி எழுத்துக்களை அழிப்பதும் என பல கலாட்டாக்கள் அரங்கேறி வருகிறது.

அதில் ஹிந்தி எதுன்னு தெரியாமல் ஆங்கிலத்தை அழித்த சம்பவங்களையும் பார்க்கிறோம். இதை குசும்புக்கார நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

ஹிந்தி தெரியாதுன்னா பரவாயில்ல எது ஹிந்தின்னு தெரியலன்னா எப்படிடா என நக்கல் அடித்து வருகின்றனர். அதேபோல் சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்த சம்பவமும் ட்ரெண்டிங்கில் உள்ளது.

அதைத் தொடர்ந்து நடிகையின் வழக்கில் அவர் விசாரணைக்கு ஆஜரானது என அனைத்தையுமே பிற கட்சியினர் கிண்டல் செய்து மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

அப்படி இணையத்தில் தற்போது வைரலாகி வரும் சில மீம்ஸ் தொகுப்பு இதோ.

Trending News