Memes: தை மாதம் வந்துவிட்டது இனிமே நமக்கு நல்ல நேரம்தான். தை பிறந்தால் வழி பிறக்கும் என பெரியவர்கள் கூறுவது உண்டு.
புது வருடத்தில் சில ராசிகளுக்கு நல்லதும் சில ராசிகளுக்கு நேரம் சரியில்லாத நிலையும் இருக்கும். ஆனாலும் வாழ்க்கையை வாழ்ந்து தானே ஆக வேண்டும்.
இந்த புது வருஷத்தில் எப்படியாவது முன்னேறிடலாம்னு நம்பிக்கையோடு ஓடிக் கொண்டிருப்போம். ஆனால் ஒவ்வொரு வருஷமும் இதே நிலைதான்.
இது நம்மில் பல பேரின் வாழ்க்கையில் நடக்கும் விஷயம் தான். இதை குறும்புக்கார நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கிண்டல் அடித்து வருகின்றனர்.
தை பொறந்தா வழி பொறக்கும்னு சொன்னியே இதோட எனக்கு 34 தை முடிஞ்சிடுச்சு. புதுசு புதுசா நாலு பிரச்சனை தான் பொறக்குது போன்ற மீம்ஸ் வைரலாகி வருகிறது.
அதேபோல் 90ஸ் கிட்ஸ் இந்த தை மாசமாவது நமக்கு கல்யாணம் நடக்குமா என்ற ஆவலுடன் இருக்கின்றனர். அது சம்பந்தப்பட்ட மீம்ஸ் கூட ட்ரெண்டிங் தான்.
அதேபோல் இது தை மாசம் இல்ல மொய் மாசம் என கலாய்த்து வருகின்றனர். ஏனென்றால் மார்கழி மாதத்தில் எந்த நல்ல காரியத்தையும் நடத்த மாட்டார்கள்.
தை மாதத்தில் தான் சுப காரியங்கள் நடக்கும் இதனால் குடும்பத் தலைவர்கள் மொய் வைப்பதற்கே தனியாக சம்பாதிக்க வேண்டும் என்ற அளவுக்கு இருக்கும்.
அதனால் இது தை மாசம் இல்லை மொய் மாசம். எத்தனை கல்யாண பத்திரிக்கை வரப்போதோ எவ்வளவு மொய் வைக்கணுமோ என புலம்பாதவர்களே கிடையாது.
அப்படி இணையத்தை கலக்கும் சில நகைச்சுவை மீம்ஸ் தொகுப்பு இதோ உங்களுக்காக.