Memes: தினம் தினம் சோசியல் மீடியா அனல் பறக்கிறது. அதில் கடந்த சில நாட்களாக அண்ணா பல்கலைக்கழக விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
அதற்கு விஜய் உட்பட பல அரசியல் பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அது தொடர்பாக யார் அந்த சார் என்ற ஹேஷ்டாக் வைரல் ஆகி வருகிறது.
இது ஒரு புறம் இருக்க மூதாட்டி ஒருவர் முதல்வர் போஸ்டர் மீது செருப்பு வீசி மண்ணை வாரி போடும் வீடியோ வைரலாகி வருகிறது.
அதை அடுத்து இப்போது பாட்டி மீது எம்எல்ஏ ஒருவர் புகார் கொடுத்துள்ளார். அதனால் போலீசார் பாட்டியை பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதை நெட்டிசன்கள் கிண்டலடித்து ட்ரோல் செய்து வருகின்றனர். அந்த சார் யாருன்னு பிடிக்க சொன்னா பாட்டிய போய் தேடிக்கிட்டு இருக்காங்க.
காவல்துறைக்கு பாட்டி தண்ணி காட்டி விட்டார். நிலாவில் அவர் வடை சுட்டு வருவதால் ரகசிய படை அங்கு விரைகிறது என பங்கம் செய்து வருகின்றனர்.
அதேபோல் மாணவியை பலவந்தப்படுத்திய குற்றவாளியை பிடிக்க முடியவில்லை. பாட்டியை பிடிக்க தனிப்படை அமைப்பதெல்லாம் இங்கதான் நடக்குது.
அடுத்ததாக யார் அந்த பாட்டின்னு ஹேஷ்டாக் வரப்போகுது என கமெண்ட் போட்டு வருகின்றனர். இப்படி இணையத்தை கலக்கும் போஸ்டர் பாட்டியின் சில மீம்ஸ் இதோ.