திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அப்படி அந்த ரோட்ல என்ன சீன் தான் எடுத்து வச்சிருக்கீங்க.. அஜித்தின் விடாமுயற்சியை பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்

Memes: லைக்கா தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் விடாமுயற்சி அப்டேட் கேட்பதற்கு கூட ரசிகர்கள் இப்போது தயங்குகிறார்கள். ஏனென்றால் அப்டேட் கொடுக்கிறேன் என்ற பெயரில் ஏதாவது ஒரு போஸ்டர் வெளிவருகிறது.

vidaamuyarchi-troll
vidaamuyarchi-troll

அதுவும் வித்தியாசமாக இருந்தால் கூட பரவாயில்லை பேக்ரவுண்டில் அஜித் போட்டோ இருக்க ஒவ்வொரு நடிகரின் போட்டோவையும் வைத்து ஒரே மாதிரி போஸ்டர் வருகிறது. அதேபோல் அஜித் பையை தூக்கிக் கொண்டு பாரதிகண்ணம்மா போல் ரோட்டில் நடந்து வரும் போஸ்டர் முதலில் வெளியானது.

vidaamuyarchi-troll
vidaamuyarchi-troll

பின்னர் அதே சாயலில் அடுத்தடுத்த போஸ்டரை விட்டு ஆடியன்ஸை கடுப்பேற்றி வருகிறது பட குழு. இதை பங்கம் செய்யும் வகையில் இணையவாசிகள் அப்படி அந்த ரோட்டில் என்ன சீன் தான் எடுத்து வச்சிருக்கீங்க அதையாவது சொல்லி தொலைங்க என நக்கல் அடித்து வருகின்றனர்.

vidaamuyarchi-troll
vidaamuyarchi-troll

மேலும் சோசியல் மீடியா பிரபலம் ப்ளூ சட்டை மாறனும் தன் பங்குக்கு விடாமுயற்சி டீமை கலாய்த்து வருகிறார். அதில் கோட் பட ரிலீஸ், விஜய்யின் கட்சி மாநாடு சமயத்தில் என்னுடைய டூர் போட்டோ, விடாமுயற்சி அப்டேட் வரும்.

vidaamuyarchi-troll
vidaamuyarchi-troll

அவசரப்படாதீங்க ஒவ்வொன்றையும் தனித்தனியா இறக்கி விடுறேன் என அஜித் சொல்வது போல் மீம்ஸ் போட்டு கலாய்த்து உள்ளார். அதுதான் இப்போது அதிக அளவில் வைரல் ஆகி வருகிறது. அந்த மீம்ஸ் தொகுப்புகள் இதோ.

vidaamuyarchi-troll
vidaamuyarchi-troll

விடாமுயற்சியை கிண்டலடிக்கும் இணையவாசிகள்

Trending News