லியோ கிளைமாக்ஸ்ல 100 பேர அடிச்சு பறக்க விட்ட உங்களுக்கு பாதுகாப்பா.. முட்டைக்கு பயமா, ட்ரெண்டிங் மீம்ஸ்

memes
memes

Memes: இன்றைய பரபரப்பு செய்தியே விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சரகம் உத்தரவிட்டுள்ளது தான். இதனால் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

இதை விஜய் ஆதரவாளர்களும் தொண்டர்களும் ஒருபுறம் கொண்டாடி வந்தனர். ஆனால் அவருடைய எதிர்ப்பாளர்கள் மீம்ஸ் போட்டு பங்கம் செய்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய் மீது முட்டை வீசப்போவதாக ரஜினி ரசிகர்கள் பேசிய ஆடியோ வெளியானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து இப்படி ஒரு அறிவிப்பு வந்ததை நெட்டிசன்கள் ஒன்றோடு ஒன்று முடிச்சு போட்டு கலாய்த்து வருகின்றனர்.

லியோ பட கிளைமாக்ஸ்ல 100 பேர அடிச்சு பறக்க விட்ட உங்களுக்கு பாதுகாப்பா முட்டை மேல் அவ்வளவு பயமா என கொஞ்சம் ஓவராகவே கலாய்த்து வருகின்றனர்.

அதேபோல் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி சாட்டை துரைமுருகன் உட்பட பலரும் விஜய்யை கிண்டலடிக்கும் விதமாக ஹாஷ்டாக் போட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

அப்படி இணையதளத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வரும் சில மீம்ஸ் தொகுப்பு இதோ.

Advertisement Amazon Prime Banner