
Memes: கடந்த சில நாட்களாகவே சுனிதா வில்லியம்ஸ் பற்றிய செய்திதான் வைரலாகி வருகிறது. அதிலும் விண்வெளியில் இருந்து அவர் புறப்படும் முன்பே மீடியாக்களின் கவனம் அவர் பக்கம் சென்று விட்டது.

அதை அடுத்து அவர் பத்திரமாக பூமிக்கு வந்தது வரை அனைத்துமே பரபரப்பு செய்திகள் தான். அதை தொடர்ந்து அவருக்கான வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

இது ஒரு பக்கம் இருக்க சுனிதா வில்லியம்ஸ் மட்டும் இந்தியாவா இருந்திருக்கணும் பாரத மகளே வருக அப்படின்னு போஸ்டர் அடிச்சு போஸ் குடுத்துருப்பாங்க என மத்திய அரசை நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

அது மட்டும் இன்றி சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி போனதுக்கு காரணமே பெரியார் தான் என எக்கச்சக்க மீம்ஸ் சோசியல் மீடியாவில் கொட்டி கிடக்கிறது.

அதில் அனைவரையும் ரசிக்கவும் சிரிக்கவும் வைத்திருக்கிறது ஒரு மீம்ஸ். அதாவது இந்நேரம் அக்ஷய் குமார் சுனிதா வில்லியம்ஸ் வாழ்க்கை வரலாறுல நடிக்க பிளான் போட்டிருப்பார் என கலாய்த்து வருகின்றனர்.

அந்த அளவுக்கு அவர் அதிகபட்சமாக வாழ்க்கை வரலாறு படங்களில் நடித்திருக்கிறார். அதைத்தான் நெட்டிசன்கள் குசும்பாக கிண்டல் அடித்து வருகின்றனர்.

இப்படி சோசியல் மீடியாவை கலக்கி கொண்டிருக்கும் சில நகைச்சுவை மீம்ஸ் தொகுப்பு இதோ.