Memes: நேற்றிலிருந்து யூடியூபர் இர்ஃபானை நெட்டிசன்கள் வச்சி செய்து வருகின்றனர். வழக்கம் போல அவர் போட்ட வீடியோ தான் அதற்கு காரணம்.

இதையே ஒரு வேலையாக வைத்திருக்கும் அவர் ரம்ஜானுக்காக ஏழை மக்களுக்கு கைலி புடவை அன்பளிப்பாக கொடுத்தார். அங்கு தான் அவர் சிக்கிவிட்டார்.

செய்யும் உதவியை ஒழுங்கா செய்யாமல் காருக்குள் இருந்தபடியே கொடுத்தது முதல் தப்பு. அதை வீடியோவாக எடுத்தது இரண்டாவது தப்பு.

உதவி செய்துவிட்டு அவர்களை மரியாதை இல்லாமல் கண்டபடி பேசியது மூன்றாவது தப்பு என அடுக்கிக் கொண்டே போகலாம். இதை பார்த்த இணையாவாசிகள் இவர் பெரிய ஜமீன் பரம்பரை என திட்டி தீர்க்கின்றனர்.

வி ஜே பார்வதி கூட இதற்கு எதிராக வீடியோ போட்டு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். அதேபோல் வரான் வீடியோ போடுறான் பிரச்சனையில சிக்குறான்.

ஏன்னு கேள்வி கேட்டா சாரின்னு சொல்லிட்டு போயிட்டே இருக்கான். இதுக்கு இல்லையா ஒரு எண்டு என ட்ரோல் மீம்ஸ் வைரல் ஆகி வருகிறது.

அந்த வீடியோ வைரலாகும் போது மன்னிப்பு வீடியோ வரும் என நாம் எதிர்பார்த்தோம். அதே போல் மன்னிப்பு கேட்டு வெள்ளை புறாவை பறக்க விட்டிருக்கிறார் இர்பான்.
ஆனால் அவருடைய அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகமாகிட்டே போகுது. அந்த சேனலை அன் சப்ஸ்க்ரைப் செய்யுங்க என நெட்டிசன்கள் கடுப்பில் கமென்ட் போட்டு வருகின்றனர்.