புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பூசணிக்காய் உடைத்தும் பிரயோஜனமில்லை.. காமெடியனாகவே இருந்திருக்கலாம் என யோசிக்கும் சூரி

அசுரன்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் நடிகர் சூரியுடன் இணைந்து பணியாற்றும் படத்திற்கு “விடுதலை” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வெளியான போஸ்டர்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. போஸ்டர்கள் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆக படத்தின் இருந்து வேறு எந்த அறிவிப்பும் இல்லை.

இந்தப்படத்தில் சூரி கதையின் நாயகனாக நடிக்க நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது மிகவும் பிஸியாக நடித்து வரும் விஜய் சேதுபதி நடிப்பில் நிறைய படங்கள் தயாராக வருகின்றன. பல மொழிகளிலும் நடித்து வரும் விஜய் சேதுபதியால் சில படங்களுக்கு பிரித்து பிரித்து கால்ஷீட் கொடுக்க முடியாமல் இருக்கும் அளவிற்கு பிஸியாகி விட்டார். இந்த நிலையில் இவருடைய கால்ஷீட் இல்லாமல் தான் விடுதலை படமும் நின்று போயுள்ளது.

எப்போதும் நாவல்களை படமாக்குவதில் ஆர்வம் கொண்ட இயக்குநர் வெற்றிமாறன் இம்முறை சிறுகதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதி, 1992-ம் ஆண்டு ஆனந்த விகடனில் வெளியான ‘துணைவன்’ சிறுகதையை அடிப்படையாகக்கொண்டே இப்படம் எடுக்கப்படுகிறது.

இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப்படத்தை RS Infotainment தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரித்து வருகிறார். விடுதலை படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே சத்தியமங்கலத்தின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் படமாக்கப்பட்டு வந்தது.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதியின் கால்ஷீட் இல்லாததால் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. கடைசியாக இன்னும் 40 நாட்கள் மட்டுமே சூட்டிங் மீதியுள்ளது என கூறப்பட்டு ஒரு வருடம் ஓடிவிட்டது. தற்போது விஜய் சேதுபதி மீண்டும் கால்ஷீட் கொடுக்கவே, வண்டலூர் அருகே பிரம்மாண்ட ரயில்வே செட் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தகவல் வந்துள்ளது. அதன் படி ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

அதற்காக நடிகர் விஜய் சேதுபதியிடம் 30 நாட்கள் கால்ஷீட் வாங்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு மீதம் 40 நாட்களே உள்ள நிலையில் விஜய் சேதுபதியிடம் மட்டும் 30 நாட்கள் கால்ஷீட் வாங்கப்பட்டுள்ளதால் படத்தில் நாயகன் சூரியா? இல்லை விஜய் சேதுபதியா? என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

இதில் போலீஸாக சூரியும், போராளியாக விஜய்சேதுபதியும் நடிக்கிறார்கள். முதலில் விஜய்சேதுபதிக்கு பதில் பாரதிராஜா நடிக்கயிருந்தார். அவரைவைத்துதான் ஷூட்டிங்கும் தொடங்கியது. ஆனால், சத்தியமங்கலம் காட்டுக்குள் குளிர் அதிகம் இருந்ததால் பாரதிராஜாவின் உடல் ஒத்துழைக்கவில்லை. இதனால் பாரதிராஜா படத்தில் இருந்து விலக விஜய்சேதுபதி படத்தில் இணைந்தார். ஏற்கனவே இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது என்று பூசணிக்காய் எல்லாம் உடைத்தனர். ஆனால் இன்னும் நாட்கள் இழுத்துக் கொண்டே போகிறது .இதற்கு சூரி நீங்க காமெடியன் ஆகவே கலக்கி இருக்கலாம் என்று ரசிகர்கள் சூரியை கலாய்த்து வருகின்றனர்.

Trending News