சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

சொந்தமாக விமானம் வைத்திருக்கும் 10 நடிகர்கள்.. கொஞ்சம் ஓவரா தான் போறீங்க

பாலிவுட் பிரபலங்கள் தங்களை கவர்ச்சிகரமாக மற்றும் ஆடம்பரமாக வைத்து கொள்ள விரும்புகிறார்கள். இவர்கள் ஆடை முதல் வீடு, கார்கள் என அனைத்திலும் தங்களது ஆடம்பர வாழ்க்கையை காட்டி வருகிறார்கள். அந்த வகையில் சில பிரபலங்கள் தங்களுக்காக தனியார் ஜெட் விமானங்களையும் வைத்திருக்கிறார்கள்.

அக்ஷய் குமார் : இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் அக்ஷய குமார். இவர் ஒரு வருடத்திற்குள் 3 முதல் 4 பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து வருகிறார். அக்ஷய் குமார் ஷூட்டிங் மற்றும் வேறு இடங்களுக்குச் செல்ல 260 கோடி மதிப்புள்ள தனியார் ஜெட் விமானத்தை வைத்திருக்கிறார்.

சல்மான் கான் : பாலிவுட் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவர் சல்மான் கான். இவர் தன்னுடைய படங்கள் மூலம் நிறைய சம்பாதிக்கிறார். சல்மான்கான் ஷூட்டிங், புரோமோஷன், வெக்கேஷன்களுக்கு செல்ல தன்னுடைய தனியார் ஜெட் விமானத்தை பயன்படுத்துகிறார்.

ஷில்பா ஷெட்டி : பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஷில்பா ஷெட்டி. இவரும், இவரது கணவர் ராஜ் குந்த்ராவும் தங்களின் தனிப்பட்ட பயணங்களுக்கு அவர்களுடைய தனிப்பட்ட ஜெட் விமானத்தை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது

ஷாருக் கான் : தொழில்துறையில் பணக்கார நடிகர்களில் ஒருவராகத் திகழ்பவர் நடிகர் ஷாருக்கான். இவர் மிக ஆடம்பரமான வீடுகள் மற்றும் சொகுசு கார்கள் வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஷாருக்கானுக்கு சொந்தமாக தனியார் ஜெட் விமானம் ஒன்று உள்ளது.

அமிதாப் பச்சன் : பாலிவுட்டில் மூத்த நடிகரான அமிதாப் பச்சன் பல இடங்களுக்கு செல்வதற்கு தனது தனிப்பட்ட ஜெட் விமானத்தில் பயணம் செய்ய விரும்புகிறார். இதுதவிர அவருடைய மகன் நடிகர் அபிஷேக் பச்சன் ஒரு ஆடம்பரமான தனியார் ஜெட் விமானத்தை வாங்கி உள்ளார்.

அஜய் தேவ்கன் : அஜய் தேவகன் மிகவும் எளிமையானவர். அஜய் தேவன் விலையுயர்ந்த கார்களை வைத்திருப்பதை தவிர ஒரு தனியார் ஜெட் விமானத்தையும் வைத்திருக்கிறார். அதனுடைய விலை சுமார் 84 கோடி ஆகும். தனியார் ஜெட் விமானத்தை வைத்திருக்கும் முதல் பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கனும் ஒருவன்.

பிரியங்கா சோப்ரா : பிரியங்கா சோப்ரா ஆடம்பர வாழ்க்கையை விரும்பக் கூடியவர். இவர் உடை அலங்காரம் முதல் அனைத்தின் மீதும் அதிக கவனம் செலுத்த கூடியவர். பிரியங்கா சோப்ரா பிரபல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மற்றும் படப்பிடிப்புக்காக அடிக்கடி ஒரு தனியார் ஜெட் விமானத்தில் பயணிக்கிறார்.

அணில் கபூர் : பாலிவுட்டில் நடிக்க மற்றும் திரைப்பட தயாரிப்பாளராக பிரபலமானவர் அணில் கபூர். இவர் நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் செல்ல தனியார் ஜெட் விமானம் ஒன்று வைத்துள்ளார். அணில் கபூர் அடிக்கடி தனது சொந்த ஜெட் விமானத்தில் பார்ட்டிக்கு செல்வதை காணமுடிகிறது.

ஹிரித்திக் ரோஷன் : ஹிரித்திக் ரோஷன் ஒரு ஆடம்பரமான வாழ்க்கையை விரும்புபவர். இவர் ஆடம்பரமான மற்றும் கவர்ச்சிகரமான தனியார் ஜெட் விமானத்தை சூட்டிங் மற்றும் குடும்பத்துடன் சுற்றுலா செல்லும்போது பயன்படுத்துகிறார்.

மாதுரி தீக்ஷித் : பாலிவுட்டில் 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் மாதுரி தீக்ஷித். இவர் தயாரிப்பாளராக மற்றும் தொலைக்காட்சிகளிலும் பணியாற்றி உள்ளார். பாலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக மாதுரி தீக்ஷித் உள்ளார். இவர் பல இடங்களுக்கு எளிதாக பயணிக்க தனியார் ஜெட் ஒன்றை வாங்கியுள்ளார்.

Trending News