திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஹாலிவூடிலும் கலக்கிய 10 தமிழ் நடிகர்கள்.. ஹீரோவாக கால் பதித்த நடிப்பு அசுரன் தனுஷ்

சினிமாவை பொறுத்தவரை மொழி என்பது தடையே இல்லை. நல்ல திறமை இருப்பவர்களை ரசிகர்களே அடையாளம் கண்டு கொள்வார்கள். அது போல நல்ல நடிப்பு திறமை இருந்தாலே அவர்களுக்கு மற்ற மொழி இயக்குனர்கள் வாய்ப்புகளை வாரி வழங்குவார்கள். அப்படி இங்கிருந்து ஹாலிவுட் வரை சென்று நடித்த நடிகர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

மாதவன்: மாதவன் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு சீரியலில் நடித்திருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் அதற்கு முன்பே இன்பெர்னோ என்னும் ஆங்கில படத்தில் நடித்திருக்கிறார். நத்திங் பட் லைஃப், தெ போர் லெட்டர் வர்ட் போன்ற ஆங்கில படங்களிலும் நடித்தார்.

நம்பியார்: 60 களில் கோலிவுட் ரசிகர்களை தன்னுடைய வில்லத்தனத்தினால் மிரட்டியவர் நம்பியார். இவர் 1000 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். மேலும் நம்பியார் தி ஜங்கிள் என்னும் ஹாலிவூட் படத்திலும் நடித்திருக்கிறார்.

Also Read: நம்பியார் நடிப்பில் மறக்கமுடியாத 5 படங்கள்.. எம்ஜிஆருக்கு நிகரான வில்லன் இவர்தான்

ஜி வி பிரகாஷ்: இசையமைப்பாளராக தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கிய ஜி வி பிரகாஷ் இப்போது பாடகராகவும், ஹீரோவாகவும் இருக்கிறார். இவர் டிராப் சிட்டி என்னும் ஆங்கில படத்திலும் நடித்திருக்கிறார்.

பிரகாஷ் ராஜ்: வில்லன், ஹீரோ, குணச்சித்திர கதாபாத்திரம் என பன்முகத் திறமை கொண்டவர் தான் நடிகர் பிரகாஷ். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என இந்திய சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர். இவர் ட்ராப்பிக்கல் ஹீட் என்னும் ஆங்கில படத்தில் நடித்திருக்கிறார்.

தபு: பாலிவுட்டின் புகழ் பெற்ற நடிகைகளில் ஒருவர் தபு. இவர் காதல் தேசம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். ஹனுமன், தி நேம் சேக், லைப் ஆப் பி போன்ற ஆங்கில படங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.

Also Read: கல்யாணமே தேவையில்லை.. 51 வயதிலும் குழந்தை பெற்றுக் கொள்ள துடிக்கும் அஜித் பட நடிகை

நித்யா மேனன்: தன்னுடைய எதார்த்தமான நடிப்பினால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை நித்யா மேனன். இவர் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கினார். இவர் தபு நடித்த ஹனுமன் என்னும் ஹாலிவுட் படத்தில் தான் அறிமுகமானார்.

தனுஷ்: நடிகர் தனுஷ் கோலிவுட்டில் தன்னை தானே செதுக்கி கொண்ட திறமையான நடிகர். நடிப்பின் அசுரன் என்றே இவரை சொல்லலாம். இவர் தி ஜர்னி ஆப் பக்கீர், தி க்ரெ மேன் என்னும் ஆங்கில படங்களில் நடித்திருக்கிறார்.

ரஜினிகாந்த்: கோலிவுட்டில் மூன்று தலைமுறைகளாக சூப்பர் ஸ்டார் என்னும் பட்டத்தை தன்னுடைய வசம் வைத்திருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு மலேசியா, ஜப்பான் நாடுகளில் ரசிகர் மன்றமே இருக்கிறது. இவர் 1988ஆம் ஆண்டு வெளியான பிளட்ஸ்டோன் என்னும் ஹாலிவுட் படத்தில் நடித்தார்.

நெப்போலியன்: முழுக்க முழுக்க கிராமிய கதைகளில் நடித்து மக்களிடையே வரவேற்பை பெற்றவர் நடிகர் நெப்போலியன். இவர் கோலிவுட்டில் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடிப்பில் பட்டையை கிளப்பியிருப்பார். இவர் டிவில்ஸ் நைட், கிறிஸ்துமஸ் கூப்பன், ஒன் மோர் ட்ரீம், ட்ராப் சிட்டி போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்திருக்கிறார்.

பூஜா குமார்: தமிழில் காதல் ரோஜாவே, விஸ்வரூபம், உத்தமவில்லன் போன்ற படிகளில் நடித்தவர் நடிகை பூஜா குமார். மாடல் நடிகையான இவர் நைட் ஒப் ஹெனா, ஹைடிங் திவ்யா, பாலிவுட் பீட்ஸ், நாட்ஸ் அர்பன் போன்ற ஆங்கில படங்களிலும் நடித்திருக்கிறார்.

Also Read: கேலி, கிண்டலுக்கு உள்ளான நெப்போலியன்.. வெறிகொண்டு சாதித்து காட்டிய சம்பவம்

Trending News