ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

தனது சொந்த வாழ்க்கையை படமாக்கிய 3 இயக்குனர்கள்.. ரணத்தை உண்டாக்கிய செல்வராகவன்

தனது வாழ்வில் நடந்த சம்பவத்தை அல்லது தனது மனதில் தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வை சில இயக்குனர்கள் படமாக எடுத்து வெற்றி கண்டுள்ளனர். அவ்வாறு தமிழ் சினிமாவிலும் சில இயக்குனர்கள் தங்களது வாழ்வின் நடந்தவற்றை படமாக எடுத்துள்ளனர். அந்த வகையில் 3 இயக்குனர்களின் சொந்தப் படத்தை பார்க்கலாம்.

செல்வராகவன் : காதல் கதையே வித்தியாசமாக சொல்லி வெற்றி படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் செல்வராகவன். இவர் தற்போது தனது தம்பி தனுஷ் வைத்து நானே வருவேன் படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் இவர் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி படத்தைப் பற்றிய சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதாவது 7ஜி ரெயின்போ காலனி படம் தனது கல்லூரி காலத்து நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது என கூறியிருந்தார்.

மேலும் இப்படத்தில் கதிர் கதாபாத்திரத்தை தன்னை மனதில் வைத்துக் கொண்டு தனக்கு ஒரு பெண்ணின் மீது கல்லூரி படிக்கும்போது காதல் ஈர்ப்பு இருந்ததை மையமாக வைத்து கற்பனையாக எடுத்த படம் தான் 7ஜி ரெயின்போ காலனி என செல்வராகவன் கூறினார். இப்படத்தின் சில காட்சிகள் ரசிகர்களின் மனதை ரணமாக்கியது.

கௌதம் வாசுதேவ் மேனன் : காதலை அவ்வளவு அழகாக தனது படங்களின் மூலம் வெளிப்படுத்தியவர் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். மின்னலே, காக்க காக்க, விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்கள் ரசிகர்களின் ஃபேவரட் படமாக உள்ளது. இவர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் வாரணம் ஆயிரம்.

மகன் தனது தந்தையின் மரணத்தைப் பற்றி கேள்விப்பட்ட அந்த நிமிடம் அவருடன் தனது வாழ்க்கையின் பல்வேறு நிகழ்வுகளை நினைவுபடுத்தும் விதமாக இந்த கதை அமைந்திருந்தது. கௌதம் வாசுதேவ் மேனன் தனது தந்தையை மனதில் வைத்த இந்த படத்தை இயக்கியிருந்தார். மேலும் தனது தந்தைக்கு இந்த படத்தை அர்ப்பணித்தார்.

லோகேஷ் கனகராஜ் : தொடர் வெற்றிப் படங்களை மட்டுமே தந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படத்தில் திரை வாழ்க்கையை ஆரம்பித்த கைதி, மாஸ்டர் தற்போது விக்ரம் என லோக்கேஷின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. மேலும் விக்ரம் படம் 400 கோடியை தாண்டி வசூல் ஈட்டியுள்ளது.

லோகேஷன் முதல்படமான மாநகரம் படம் அவருடைய சொந்த வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகளை வைத்து எடுத்திருந்தார். அதாவது ஒரே புள்ளியில் சந்திக்கும் ஐந்து வெவ்வேறு வாழ்க்கையை கொண்ட இளம் மனிதர்கள் சந்திக்கும் பிரச்சனையே படத்தின் கதையாக அமைந்திருந்தது.

Trending News